அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், மூலோபாய திட்டமிடல் மற்றும் கொள்கை பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர், நேற்றுமுன்தினம் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவையும், விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்களவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்தே இவர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அதேவேளை, மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ருடர்...
தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் மைக்கேல் பிளாட்டினி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. செப் பிளாட்டர் தனது பதவி காலத்தில் துணைத்தலைவராக இருந்த...
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெற்ற 40-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனே அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஜம்பா 6 விக்கெட்டுக்களை சாய்த்தார். ஐதராபாத் அணியில் ஷிகர் தவான் 33(27), வில்லியம்ஸன்...
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். 2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக் பாஷ் லீக் அணிகள் கூட...
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவராக இருந்த சீனிவாசன் பதவி இழந்தார். பி.சி.சி.ஐ.யின் நெருக்கடி காரணமாக ஐசிசி தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் அவரது பதவிக்காலத்தில் அவருக்குப் பதிலாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது ஷஷாங் மனோகரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. இந்நிலையில், ஐ.சி.சி. தலைவராக...
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 92 ரன்னில் சுருண்டு 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை அணி அந்த சரிவில் இருந்து மீண்டு நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பார்த்தீவ்...
ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய டென்னிஸ் அணியில் இடம் பிடித்து இருந்த பெர்னார்ட் டாமிச் திடீரென விலகி இருக்கிறார். உலக தர வரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் பெர்னார்ட் டாமிச் தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு மற்ற போட்டிகளில் விளையாடுவது முக்கியம் என்பதால் இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டாக்கா: வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இடி, மின்னல் மற்றும் புயலுடன் கோடைமழை பெய்வதுண்டு. அவ்வகையில், இங்குள்ள 14 மாவட்டங்களில் நேற்று இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தலைநகர் டாக்காவில் கால்பந்தாட்ட மைதானத்தின்மீது மின்னல் தாக்கியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். இதேபோல், நாட்டின் வடமேற்கு மாவட்டமான பாப்னாவில் எட்டுபேரும், சிராஜ்கன்ச், ராஜ்ஷாயி மாவட்டங்களில் தலா ஐந்துபேரும், கிஷோர்கஞ், பிரமன்பரியா மாவட்டங்களில் தலா நான்குபேரும் பலியாகினர்....
பிரேசில் நாட்டின் பாராளுமன்றத்தில் அதிபர் தில்மா ரூசெப்பின் பாராளுமன்ற நடவடிக்கைக்கு 6 மாத காலம் இடைக்கால தடை விதிக்க அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரியோடிஜெனீரோ: லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68) என்ற பெண் அதிபராக உள்ளார். அவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிற நிலையில், 2014-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி...
ஈராக்கில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையினராக வாழும் பாலாத் நகரம், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள ஒரு உணவு விடுதியில் ஏராளமான இளைஞர்கள், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு கூடி இருந்தனர். அப்போது கார்களில் அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், காரில் இருந்தவாறு அந்த உணவு விடுதியை நோக்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் நாலாபக்கமும் சிதறி ஓடினர்....