கண்டியில் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படாத சொல்கலட்டுக்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.
கண்டி நகரில் அமைந்துள்ள பாரிய வர்த்தக கட்டிட தொகுதி ஒன்றில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சொக்லட் பெட்டியொன்றில் அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சபை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இது...
கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்பட மாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதே போன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் இந்த அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபகார்த்த நிகழ்வுகள் எவையாயினும்,...
புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அடங்கியிருந்த யாழ்ப்பாணத்து ரவுடிகளின் காடைத்தனம் புலிகளின் மறைவின் பின்னர் இன்று என்றும் இல்லாதவாறு தலைதூக்கி இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் கொள்ளை, வாள் வெட்டு, பாலியல் நடவடிக்கைகள். போதைப்பொருள் வியாபாரம் மக்கள் இன்றைய நிலையில் பயத்துடனே இரவுப்பொழுதை கழிக்கின்றனர்.
எங்கு எப்போது யார் வீட்டில் கொள்ளை நடக்கும், யாரின் வீடு புகுந்து வாள்வெட்டு நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. தென் இந்திய கழிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அதை நிஜத்தில்...
இசையமைப்பாளர் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சொனி நிறுவனம் பெற்றுள்ளது.
பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ’, ‘ரம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும்...
புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டது.
இதேவேளை, ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ...
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற நிலையில் இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சத்தீவில் கடற்படை முகாம்-வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி முற்றாக மறுத்துள்ளார்.
Thinappuyal -
கச்சத்தீவில் ஸ்ரீலங்காக் கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி முற்றாக மறுத்துள்ளார்.
கச்சத்தீவில் ஸ்ரீலங்காக் கடற்படை முகாம் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய அரசு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியதாவது…
இதற்கு பதிலளித்த அவர், யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ...
வாரியப்பொல பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகன் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாரியப்பொல நகரிலுள்ள தனது தந்தையின் கடையிலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
கடத்தல் காரர்கள் காரில் வந்ததாகவும், குறித்த இளைஞனின் அபயக்குரல் அக்கம்பக்கம் கேட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கும் அதேவேளை கடத்தப்பட்டு சுமர் அரை மணி நேரத்தின் பின்னர் குறித்த இளைஞனின்...
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் இருந்து 150க்கும் அதிகமான பாம்புகள் பிடிபட்டுள்ளன. KHERI மாவட்டத்தின் ஓவல் கிராமத்தில் பிரமிளா என்பவரின் வீட்டில் இருந்து திடீரென பாம்புகள் வெளி வர தொடங்கியுள்ளன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அங்கு வந்த வனத்துறையினர் அந்த வீட்டில் இருந்து மட்டும் 150 பாம்புகளை பிடித்தனர்.
பின்னர் பாம்புகள் அனைத்தும் வனத்தில் விடப்பட்டன. திடீரென 100க்கும் அதிகமான பாம்புகளை கண்டதால் அப்பகுதி மக்கள்...
எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்று வருகின்றது.’
Thinappuyal News -
'எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது
புதுப் பொலிவு பெற்று வருகின்றது.'
இம்மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு உலக வரலாறு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் புதுப் பொலிவு பெற்று வருகின்றது. இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, மேற்படி வேலைத்திட்டங்கள் பூர்த்தியாகும் நிலையில்...