சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரத்தில் கைதான ஜூலியனின் சகோதரிக்கு அழைப்பை மேற்கொண்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர், இன்றைய தினம் ஜூலியனை பார்க்க 2 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய ஜீலியனின் சகோதரி மற்றும் தந்தை ஆகியோர் இன்று கொழும்பு 2 ஆம் மாடிக்குச் சென்ற போது, ஜீலியன் இங்கு இல்லை எனவும் அவரை விசாரணைக்காக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளோம் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...
  சிறிலங்கா இராணுவத்தில் சேவையில் உள்ள நான்கு மேஜர் ஜெனரல்களும், ஓய்வுபெற்ற இராணுவத் தளபதியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக, ராவய சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.   அரசியல்வாதிகள், பாதுகாப்பு அமைச்சு உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச நிறுவன உயரதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்னர், இராணுவத் தளபதியின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு...
  வவுனியாவில்   வவுனியா, செட்டிகுளம் கல்லாறு பகுதியில் வேகக்கட்டுபாட்டையிழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னார், முள்ளிக்குளம் பரண முகாமில் இருந்து விடுமுறையில் சென்ற கடற்படையினரை மதவாச்சி பேருந்து நிலையம் நோக்கி ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களில் ஒன்றே அங்கிருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு பள்ளத்தினுள் வீழ்ந்துள்ளது. குறித்த பேருந்தில் 52 கடற்படையினர் இருந்த போதும், 23 கடற்படையினர் காயமடைந்த நிலையில்...
  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி போலியான கடவுச் சீட்டு வைத்திருந்தமை, அதனைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்டமை என்பன குற்றவியல் சட்டத்தின் கீழும் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் படியும் வழக்குத் தொடர முடியுமான குற்றங்கள் என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அனுமதியின் பிரகாரம்,...
  வடக்குக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தமிழ் மக்கள் தாங்கள் இழந்த உயிர்களை தவிர மற்ற எல்லாவற்றையும் தருவேன் என திருவாய் மலர்ந்தருளும் இலங்கை ஜனாதிபதி இறந்தவர்களை வழிபடும் உரிமையை தடுப்பதேன் என சண் மாஸ்டர் கேள்வி எழுப்பியுள்ளார். மனித குலம் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரையான அதன் வரலாற்று பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம் தான் மனித...
    வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் சார்பில் அதி வணக்கத்துக்குரிய அருட்தந்தை டெஸ்மொன்ட் ஏஞ்சலோ, வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் கல்லூரியை சேர்ந்த அருட்சகோதரிகள், கருமாரியம்மன் ஆலய குருக்களும், வவுனியா அந்தணர் ஒன்றிய செயலாளருமாகிய பிரபாசர்மா குருக்கள், வவுனியா நகரப்பகுதி பள்ளிவாசல் மௌலவியும், வவுனியா அரபுக்கல்லூரியின் பதில் அதிபருமாகிய சிட்தீக் ஆகியோரும், சிவில் சமுக அமைப்புகள்...
  'சிவப்பு அறிவித்தல்' - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தமது அமைப்பில் எவ்வகையிலும் உறுப்புரிமை பெறாதஇ வவுனியா மக்களால் 'கூடுமாறும் கவிஞர்' என்று அழைக்கப்படும் மாணிக்கம் ஜெகன் என்பவரும்இ வவுனியா மக்களால் 'கொள்ளைக்கண்ணன்' என்று அழைக்கப்படும் சந்திரகுமார் கண்ணன் என்பவரும்இ கடந்த ஆறு வருடகாலமாக மனித உரிமைகள் சார்பு பணிகளில் இயங்குநிலையிலுள்ள தமது அமைப்பின் பெயரை முறைகேடாகப்பயன்படுத்திஇ பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும்இ 'வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – ஏயஎரnலைய...
  பொருளாதார மத்திய மையம் வவுனியா தான்டிக்குளத்திலேயே அமைக்கப்படவேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த இடத்திலேயே இடம் தரவேண்டும் இல்லையேல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெரும்  மக்களுக்கான தேவயை அறிந்து முதலமைச்சரரும் அமைச்சர்களும் செயற்ப்பட வேண்டும். மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தினை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து அமைதிப்போரணியொன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா உள்ளூர்...
பயணங்களில் பயணத்துக்கு தேவையான டிக்கெட், அடையாள அட்டைகள் போன்றவற்றை எடுத்துகொள்வது மேலும் தனியாக பயணம் மேற்கொண்டால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது ஆகியவை கடைபிடிப்பது முக்கியம். இரவு நேர பயணங்களில் நம் இறங்கும் இடம் கவனிக்காமல் தூங்கிவிடுவது அல்லது கவனக்குறைவாக கடைசி நேரத்தில் ஓடி இறங்குவது இதுவே பலரின் வாடிக்கை... மக்களே திருந்துங்கள் ... இல்லையென்றால் இது போன்ற விபரீதங்கள் தடுக்க இயலாது ... ரயில் கிளம்பியபிறகு இறங்கும் இவர்களின் நிலைமையைப் பாருங்க...
  சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது. பனாகொடவில் உள்ள இலகு காலாட்படைப் பிரிவின் தலைமையகத்தில் நேற்று மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய இவருக்கு, பிரியாவிடை அளிக்கும் வகையில், தேனீர் விருந்துபசாரம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில், சிறிலங்கா இராணுவத்தின் மூத்த தளபதிகள், அதிகாரிகள்...