தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வருவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாகவும் சில ஊடகங்கள் புலிக்கதையை கூறி மிரட்டுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். முஸ்லிம் மீடியா போரத்தின் 20 ஆவது வருட நிறைவு விழா கொழும்பு 7 இல் உள்ள...
  பார்கபேல் தோட்டப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சம்பவம் பற்றி தெரிய வருவதாவது … நேற்று காலை வேளையில் தோட்டப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .குறித்த மாணவி கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்பதோடு குடும்பத்தில் ஏற்ப்பட்ட சிறு தகராறே தற்கொலைக்கு...
  மாட்டிறைச்சி அரசியல்: ஒரு திசை திருப்பும் தந்திரம் -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை) மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான். முஸ்லிம் சமூகம் 8 ஜனவரி, 2015; ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூலிப்படை என சந்தேகிக்கப்படும் பொதுபல சேனாவைப் போன்ற ஒரு சிறிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்கள இனவாதிகளின்...
  ஊடக அறிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவு   கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவிற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஊடகங்கள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்தை பயன்படுத்தக் கூடாது என்ற வகையில் அண்மையில் ஊடக அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது என ஊடக அமைச்சர்...
  கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தனிலிருந்து முல்லைத்தீவு பயணித்துக் கொண்டிருந்த வேளை கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் நின்மதியை கெடுத்து சிங்கவரகள் நின்மதியாய் வாழ முடியாது இனப்படுகொலை இடம்பெற்றதாக நான் தான் பாராளுமன்றத்தில் முதல் முதலாக எடுத்துக்கூறினேன் பா.உ.சுமந்திரனின் பரபரப்பு பேட்டி
    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தது போன்று விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்கள் மஹிந்த ராஜபக்ஷவை குறி வைத்து காத்திருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன , ரணில் – மைத்திரியின் தற்போதைய அரசாங்கம் நல்லாட்சியா? அல்லது பேயாட்சியா ? என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள என் . எம் . பெரேரா நிலையத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று...
  பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- காணொளி இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள். துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி...
  அல்குர்ஆன் சுமந்து வரும் தூதை இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்தும் நோக்கில் 'அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம்' எனும் நிறுவனம் உலமாக்களின் ஆலோசனையுடன் இன்று (29) அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தாருஸ்ஸலாமில் நடைபெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போது, அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இந்நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை வடிவமைக்கும் நோக்கில் செயற்குழுவொன்றும் இக்கலந்துரையாடலின் போது நியமிக்கப்பட்டது.
  இலங்கையின் முன்னணி சிங்கள திரைப்பட நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இந்தியாவிலுள்ள ரஜனிகாந்தின் இல்லத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க, அவரை சந்தித்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை சந்தித்ததை மகிழ்ச்சியாக இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தனது டுவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.