பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் ஈஸ்டர் தின நாளை முன்னிட்டு 15,000 முட்டைகளை பயன்படுத்தி ராட்சத ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கில் அமைந்துள்ள Bessieres என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த அபார சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் திங்கள் கிழமை ஈஸ்டர் தினத்தை கொண்டாடியதால், இதில் பங்கேற்ற கிராமத்தினருக்கு ராட்சத அளவில் ஆம்லெட் சமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் 15,000...
இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இங்கிலாந்து வீரர்கள் தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றுள்ளனர்.டி20 உலகக்கிண்ண போட்டியில் எதிர்வரும் 30ம் திகதி டெல்லியில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இந்நிலையில் தற்போது ஓய்வில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.
விராட் கோஹ்லி தனது ஆக்ரோஷ அணுகுமுறையை கைவிடக்கூடாது என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.வாழ்வா.. சாவா ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்த கோஹ்லி 51 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
கோஹ்லியின் இந்த அபார ஆட்டம் பற்றி டோனி கூறுகையில், "இந்த இன்னிங்ஸ் நம்பமுடியாத ஒன்று.
உண்மை என்னவெனில் இந்த ஆடுகளம் துடுப்பெடுத்தாட எளிதாக இல்லை. குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடுவது கடினமாக...
சிலருக்கும் தலையில் ஒருவித துர்நாற்றம் வீசும், தலையில் அதிகமாக வியர்த்தலே இதற்கு காரணமாகும்.தலையில் அதிக பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதியுறுபவர்களின் தலையில் வியர்க்கும் போது மோசமான துர்நாற்றம் வீசும்.
இதனை போக்க செய்கை வழிகளை பின்பற்றாமல், இயற்கை வழிகளை பின்பற்றுவது நன்மை பயக்கும்.
பேக்கிங் சோடா
உங்கள் முடியில் துர்நாற்றம் வீசினால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் பேக்கிங் சோடா எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதோடு, துர்நாற்றத்தையும் தடுக்கும். அதற்கு 3 பங்கு...
பொல்லாதவன், ஆடுகளம், ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் கிஷோர். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்.
இவர் பல படங்களில் வில்லனாகவும், ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவர் நடிகர் என்பதை தாண்டி ஒரு விவசாயியும் கூட. ஆம், கிஷோர் கிட்டத்தட்ட 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும், சினிமாவிற்கு வராமல் இருந்தால் ஒரு கால் ஏக்கரிலாவது விவசாயம் தான்...
பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி கடந்த 1960 முதல் தற்போது வரை 17, 695 பாடல்கள் பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கு 2016 ஜனவரி 28-ல் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 1952-ல் திரைவாழ்வைத் தொடங்கிய...
ஐக்கிய நாடுகள் சபையின் மின்சார கதிரை என்ற சொல்லானது அகராதியிலேயே இல்லாமல் செய்து விட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாரம்மல மயுரபத வித்தியாலயதத்தில் நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட போதே ஜனாதிபதி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
மயுரபத வித்தியாலயத்திற்கு வருகைத் தருவதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு, இந்த வாய்ப்பைத் தந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவிற்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் பரிசளிப்பு...
மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் நிர்வாண கோலத்தில் அலைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன் அழைந்து திரிந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பெண் இருந்த இடத்துக்கு சென்ற பெண்பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர்.
அப்பெண்ணை கைது செய்யும் போது, அவரது உடலில் சட்டையொன்று போர்த்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
குறித்த...
மன்னார் மடு பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பனைக்குளப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டச்செய்கைக்குரிய காணிகளில் சட்ட விரோதமாக மண் அகழ்வதாக குற்றஞ்சாட்டபப்ட்ட நிலையில் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.
இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இப் பகுதிக்கு சென்றிருந்த பொழுது, உரிய இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மணல்...
வீடொன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை, எல்ல பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
எல்ல பொலிஸ் பிரிவின் உடகும்பல்வெல என்ற இடத்தின் வீடொன்றில் இருந்த தங்க நகைகள் 27ஆம் திகதி; இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டது.
தங்க நகைகள், பணம் உட்பட எட்டு இலட்சத்து இருபத்திரண்டாயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள் வசமிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், ஆட்டோவொன்றும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட வாகனங்களும் திருடப்பட்டவைகளென்று முதற்கட்ட...