தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ். ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அதேவேளை, யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி, கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில்...
வடமாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உறுதி வழங்கினார். அதற்கான விசேட செயலணியொன்றை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இடம்பெயர்ந்து மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மக்களை ஜனாதிபதி சென்று பார்வையிட்டார். அரச நத்தார் தினத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்கொண்டு கருத்து தெரிவிக்கையில் - அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள்...
    தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல எனவும், மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் போருக்குப் பின்னரான தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஒரு உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர்...
  செருப்புகள் வாங்கும்போது மிகவும் கவனமாக வாங்கவேண்டும், ஏனெனில் காலுக்கு மாறான செருப்புகளால் நிச்சயம் சில உடல்நலப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.காலின் பாதுகாப்புக்குத்தான் செருப்பு அணிகிறோம் என்ற நிலை மாறி, அழகுக்காக அணிகிறோம் என்ற நிலை வந்துவிட்டதால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம். கவனத்தில் கொள்ள வேண்டியவை பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில், அதிக...
  இலத்திரனியல் சாதனங்களுக்கு பெயர்பெற்ற சோனி நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான மின்கலங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இவை சாதாரண மின்கலங்களை விடவும் 40 சதவீத மின்சக்தியை கூடுதலான நேரம் கைப்பேசிகளுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சல்பர் (கந்தகம்) எனும் மூலகத்தினை அடிப்படையாகக் கொண்டு இலிதியத்துடன் இணைத்து உருவாக்கப்படவுள்ள இந்த மின்கலம் 2020ம் ஆண்டு முதல் விற்பனைக்கு விடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையாக நின்றவன் ஹைதர் அலி என்ற 3 வயது சிறுவன்.கடந்த நவம்பர் 12ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஹைதர் அலியின் பெற்றோரும் அடக்கம். கால்பந்து ஆர்வம் கொண்ட ஹைதருக்கு ரொனால்டோ தான் ஹீரோ. இது தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியது. இதனையறிந்த ரியல் மாட்ரிட் அணி ஹைதரை ரியல் மாட்ரிட்...
  அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது. விக்கெட் கீப்பர் பிராட் ஹாட்டின் 72...
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று தெரிவுக் குழு அறிவித்தது. இதில் பஞ்சாபை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீரர் பிரைந்தர் ஸ்ரன் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தார். அதே போல் ரிஷிதவானும் அறிமுக...
  ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை தவணைக் கொடுப்பனவு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மோட்டார் சைக்கிள் வழங்குவது தொடர்பில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் சுமார் இரண்டாயிரம் ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கான தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை ஒரே தடவையில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வசதியற்றிருப்பதால் தவணை முறையில் அதன் கட்டணத்தை செலுத்த அனுமதி கோரி மனுச் செய்துள்ளளனர். இதனை ஏற்றுக் கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகவியலாளர்களுக்கான மோட்டார்...
    பீப் பாடல் குறித்து முதன்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொலைப்பேசியில் சிம்பு பேசினார். இதோ அவர் குறிப்பிட்டுள்ள செய்தி "முதலில் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை, எந்தவொரு ரேடியோ, டிவியில் ஒளிப்பரப்பு செய்யவும் இல்லை. இப்படி இருக்க எப்படி குழந்தைகளை இது பாதிக்கும். இந்த பாடல் வெளியான இதே இணையத்தில் தான் ஆபாச படங்களும் உள்ளது. அதை குழந்தைகள் பார்க்கிறார்களா. இது என்னுடைய ஒரு டம்மி பாட்டு, இந்த பாட்டில் நான்...