இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கியைடாது என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் துரித கதியில் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு...
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி சமன் திலந்த குமாரவுக்கு 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி 6 மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற மூன்று பேர் கடந்த மாதம் 29 ஆம் திகதி அச்சுவேலி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
லொறியுடன் இவர்கள் கடந்த...
வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவர் கொழும்பு தேசிய...
தனது தந்தையை கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் மகன் ஒருவர் கலவான, தேல்கோட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 3ம் திகதி தந்தையைக் கொன்று வீட்டுக்கு பின்னால் புதைத்ததாக சந்தேக நபர் தனது சகோதரரிடம் குறிப்பிட்டுள்ளார்.
குடித்து விட்டு தந்தையுடன் மோதலில் ஈடுபட்டமையினாலே தான் கொலை செய்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
சந்தேக நபர்...
விசாரணைகளுக்காக அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் றகர் வீரர் வஸிம் தாஜூடீனின் சடலமாக என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்களம், இதனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் தாஜூடீனின் தாயாரின் குருதி மாதிரிகள் சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும்...
நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மனுவிற்கான பிரதிவாதிகள் தரப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தரப்பு மனுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
இதன்...
ஜெனிவா பிரச்சினையை சமாளிக்கவே தேசிய அரசாங்கம்: டிலான் பெரேரா – மகிந்தவின் காலம் இருண்ட காலம்: பைஸர் முஸ்தபா
Thinappuyal -
ஜெனிவா பிரச்சினை போன்ற சர்வதேச சவால்களை எதிர்கொள்ளவே நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இணக்க அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளதாக பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அதன் வெற்றியை காணமுடிகிறது எனவும் ஜெனிவா யோசனையின் முதல் கட்டத்தில் சர்வதேச விசாரணை கோரப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் உள்நாட்டு பொறிமுறையாக அது மாற்றம் கண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டிலான் பெரேரா...
மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவிற்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் உபாலி கொடிகார கைது செய்யப்பட்டிருந்தார்.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையான போது அவருடன் சென்றிருந்த உபாலி கொடிகார குழப்பம் விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
உபாலி கொடிகாரவின் சட்டத்தரணிகள் பிணை கோரியிருந்தனர். இதன் போது பிணையில் செல்ல நீதிமன்றம்...
யாழ்.குப்பிளானில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குப்பிளான் தெற்கு கிராமத்தில் தோட்டக்காணி ஒன்றிலிருந்து இரு வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சில சாதாரண கண்ணிவெடிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இப் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குறித்த கண்ணிவெடிகளை நேற்றய தினம் கண்டுபிடித்துள்ளதாகவும்,
இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் ஊர் மக்கள் குறித்த கண்ணிவெடிகள் போர்காலத்தவை எனவும் எதிரியை இலக்கு வைத்து புதைக்கப்பட்டிருந்த்தாகவும் கூறிகின்றனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கையின் மீது இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது தினேஷ் குணவர்த்தன செங்கோலைத் தூக்கிச் சென்றதால் கடும் அமளி ஏற்பட்டது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா அறிக்கை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமானது.
ஆளுந்தரப்பில் திறனபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மஹிந்த சமரசிங்க விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.
அவரது உரை முடிந்தவுடன் சபைக்குத் தலைமை வகித்த முஜிபுர் ரஹ்மான், அடுத்து உரையாற்ற மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனை...