உள்ளக விசாரணை நடைபெற்றால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும்! - சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தரும்- செல்வம் அடைக்கலநாதன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில்...
  பொகவந்தலாவையில் பாடசாலை மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து குறித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக  பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே பாதிக்கப்பட்டவராவார்.   பொகவந்தலாவையிலிருந்து குயினா தோட்டம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேற்படி மாணவியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளதாக சிங்கள தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்பிய அமெரிக்கா, அது சம்பந்தமாக உள்நாட்டு விசாரணையை நடத்த இலங்கை...
  நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்) இறுதி யத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் பலிகளின் சிறப்பு உறுப்பினர்களான நடேசன் மற்றம் புலித்தேவன் மற்றும் போராளிகளை இலங்கை இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றுள்ளது எனும் உண்மை நிரூபிக்கப் பட்டுள்ளது. புலித்தேவன் பிடிக்கப்படும் பொழுது அவர் ஆடைகளுடன் இருந்துள்ளார் பின்னர் அவரை நிலத்தில் அமர வைத்து சித்திரவதை செய்தே கொன்றுள்ளனர். இப் புகைப் படங்களை உண்ணிப்பாக பார்திர்களாயின் புலித்தேவன் முதலில்...
  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் விடயத்தில் இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதன் போது பெரும்பாலும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்த அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் எதிர்க்கட்சித்...
  இந்த முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர் வன்னியை சேர்ந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசிய ப்பட்டியல் மூலம் அவர் இந்த தடவை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். இவர், எதிர்வரும் 8ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொள்வார். துணுக்காய் பிரசேத செயலகத்தின் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஷெல் வீச்சு சம்பவம் ஒன்றின்போது ஒருகாலை இழந்தார். எனினும் செயற்கைக்காலுடன் தற்போது...
  ஈழத்து சினிமாத்துறை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் இனிவரும் காலங்களில் கலைஞர்களின் பொறுப்புணர்வு அற்ற தன்மை, படைப்புக்களின் சந்தைப்படுத்தல் பிரச்சனை, ஊடகங்களின் அனாவசியமான விமர்சனங்களை தடுப்பதற்காக வவுனியா திரைக்கலைஞர்கள் சங்கம் 29/08/2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா திரைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக திரு.வி.சுபாஸ்கரனும், செயலாளராக திரு.சு.வினோத்தும், பொருளாளராக திரு.த.பிரதாபன் அவர்களும், உப தலைவராக திரு.த.சசிக்குமார் அவர்களும், உபசெயலாளர் திரு.அ.இமயவன் அவர்களும், பிரதம ஆலோசகராக திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களும்...
  எதிர்பார்த்தது... நடக்கும் என பலர் கூறியது.. பலர் நினைத்தது... அனைத்துக்கும் பதில் கிடைத்து விட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது. முடிவுகளும் வந்துவிட்டன. பிரதமரும் பதவியேற்றுவிட்டார். ஆனால் அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு அரசாங்கம் அமையப் போகின்றது என்பதனை அனைவரும் எதிர்பார்த்தனர். ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது தேசிய...
  இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில...
ஸ்மார்ட் தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு கைப்பேசி நிறுவனங்களும் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மொபைல் சாதனங்களை வடிவமைத்து வருகின்றன.இந் நிலையில் மொபைல் சாதன உலகின் ஜாம்பவானாக திகழும் அப்பிள் நிறுவனத்தின் iPhone இனை Graphics Tablet ஆக பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு AstroPad எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது. இந்த அப்பிளிக்கேஷனை 4.99 டொலர்கள் செலுத்தி iTunes தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் iOS 8 இயங்குதளத்தினைக்...