இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டாலும் இன்னும் பல சவால்கள் உள்ளன; அமெரிக்கா எச்சரிக்கை! கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி இலங்கையில் இன்னமும் பல சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்காக புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்கு தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது இந்திய...
  நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும்...
  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்கின்றனர்.   இலங்கையின் புனிதர் அருளாளர்...
பரிசுத்த பாப்பரசர் அவர்களின் மடுத்திருத்தல வருகையை முன்னிட்டு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய பிரதான வீதிகளான பிரமனாலங்குளம் - மடு, தட்சனாமருதமடு, மடு - பரப்புக்கடந்தான், மடு – மடுச்சந்தி ஆகிய வீதிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்;க 03.01.2015 அன்று துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுபெறும் நிலையில் 12.01.2015 திங்கள் காலை மடுத்திருத்தலத்துக்கு விஜயம் செய்த வடக்குமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி...
  "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ள வேண்டாம்." - இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுத்தினார் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான...
  இலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் தான் முன்னர் வகித்த அதே கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சராக ரிசாத் பதியுதீன் சத்தியப்பிரமாணம் செய்வதைப் படங்களில் காணலாம்.
  சம்பந்தன் குழு ஜனாதிபதியை சந்தித்துள்ளது! பல கோரிக்கைகள் முன்வைப்பு! ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களுடன் இணைந்து கொள்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர்...
  புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:-   01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர்,கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க -பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் 03.ஜோசப் மைக்கள் பெரேரா- உள்விவகார அமைச்சர் 04.காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர் 05.மங்கள சமரவீர - வெளிவிவகார...
  பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை நாளை (13) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் அப்போஸ்தலர் என வர்ணிக்கப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்கும் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ், காலி முகத்திடலில் திருப்பலியொன்றை நிறைவேற்றி நாட்டுக்கும், மக்களுக்கும் ஆசி வழங்க உள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திறந்த ரத பவனியாக கொழும்புக்கு வரவுள்ள பரிசுத்த பாப்பரசரை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால்...
  சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றமைக்கான புகைப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது. பஷில் தனது மனைவி புஷ்பா ராஜபக்ஷவுடன் நாட்டிலிருந்து வெளியானதாக, செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து பசில், டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.