புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். பள்ளிவாயலில் சேர்ந்த நன்கொடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவர்களின் மோதலை சமரசப்படுத்த முயற்சித்த மற்றொரு குழுவினர் மீதும் ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை மாணவி ஒருவரை மோசமாக தாக்கிய அதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பஹல பியன்வல பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின் அதிபரே தண்டிக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அதிபருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஒரு லட்சம் ரூபா மாணவிக்கு நட்ட ஈடாக வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சர்வதேச...
இறுக்கமான உடை அணிந்து வந்ததற்காக பாடசாலை மாணவன் ஒருவனின் சீருடையை ஆசிரியர் ஒருவர் வெட்டித் துண்டாக்கிய சம்பவமொன்று மீரிகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மீரிகம டட்லி சேனநாயக்க மாதிரிப்பாடசாலையில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 11ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இந்தச் சம்பவத்துக்கு இலக்காகியுள்ளார். குறித்த மாணவன் சற்று ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாக பழைய சீருடையொன்று அணிந்துகொண்டு பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். இதனைக் கண்ட பாடசாலையின்...
பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான ஊடக சந்திப்பு (கொழும்பு) ஒன்றில் அவர்கள் நேற்று தமது கோரிக்கையை முன்வைத்தனர். குறித்த அமைப்பின் இணை தலைவரான பி மகேஸ்வரி என்பவர் உரையாற்றுகையில், தமது கணவர் காரணமாகவே தாம் இந்த தொழிலுக்கு செல்ல நேரிட்டதாக குறிப்பிட்டார். தமது...
2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு சடலம் திருகோணமலைக்கு அப்பாலுக்கு கடல் பகுதியில் கடலுக்குள் மூழ்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஐடியினர் இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்னெலிகொட மன்னம்பிட்டிய சொரவில இராணுவ முகாமில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், எக்னெலிகொட முதலில் சொரவிலையில் புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதேவேளை அவர் முன்னதாக இராணுவ புலனாய்வின் இரண்டு உறுப்பினர்களால் 2010ஆம்...
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் குறித்த ஆவணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பி;த்துள்ளார். இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிறுவப்பட்ட இரண்டு முக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிசாந்த உதலாகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும், மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்றில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட 3000 வீடியோ கசட்களை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பிலேயே, மஹி;ந்த ராஜபக்ஸவின் தற்போதைய ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் இன்றைய தினம் ஹோமகம காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர். வெலிவிட்ட இன்றைய தினம் காலை, காவல்...
பயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், இலங்கை மனித உரிமை கேந்திர நிலையமும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சமாந்திரமாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் சட்டங்கள் திருத்தி...
காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு ஜனாதிபதி இந்த உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். வவுனியா பிரதிக் காவல்துறை மா அதிபர் காரியால விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குணதிலக்க என்ற சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவம்...
  விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;