நடிகை லட்சுமி மேனனை திரையில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவர் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குனர் ராம்குமார் அடுத்து இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தான் லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளது. பொரளை சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் வழியாக கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லவுள்ளது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம் போன்ற பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. உலக பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மையே எரிபொருள் விலையேற்றம் மற்றும்...
விஜய்யின் எவ்வளவு பெரிய மாஸான நடிகர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் சாதனைகளை அடுத்தடுத்து பெருகி வருவதை காணமுடிகிறது. கடந்த வருடம் அவருக்கு மெர்சல் படம் வெளியானது. இப்படம் ரூ. 250 கோடி அவரின் நடிப்பில் அடுத்ததாக சர்க்கார் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் Pre Business மிகப்பெரியளவில் நடைபெற்றுள்ளது அண்மையில் கேள்விப்பட்ட விசயமே. இந்நிலையில் மெர்சல் படத்தின் Life time gross ஐ விட சர்க்கார் Pre Business 50 சதவீதம்...
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டபிரயாணிகள் ரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்கள் நால்வரை ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றம் சிறுவர் நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்பிவைத்ததாக மட்டக்களப்பு  ரயில் நிலைய பிரதம அதிபர் கே.வசந்தகுமார் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், இதை ஒத்த சம்பவங்கள் இதற்கு முதலும் 4 தடவைகள் இடம்பெற்றள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்தத் தடவை ஏறாவூர் பொலிசாரின் தீவிர விசாரணையால் இவர்களை கைது செய்ய முடிந்தது. சம்பந்தப்பட்ட சிறுவர்கள் நால்வரும்...
ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்துவிட்ட ஸ்ரேயா திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். இதுதொடர்பில் அவர் அளித்துள்ள செவ்வியில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன். இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது. கெமராவுக்கு முன்பு மட்டும்...
உணவு விசமாகியதன் காரணமாக ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரின் ஆசிரிய மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கல்வியியற் கல்லூரில் கல்வி கற்கும் சுமார் 70 க்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் உட்கொண்ட உணவு விசமாகியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற, கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை வடிவத்தில் நிறைவடைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்ணாடிகளில் இவ்வாறு நீர் கசிவதாக ஆராய்ந்த போது தெரியவந்துள்ளது. அதற்கமைய இது தொடர்பில் மீண்டும் ஆராய்வதாக நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்கின்ற சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இந்த நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100 க்கு 70 வீதமான சீன...
விஜய் சேதுபதி, அடுத்ததாக வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ’96’ திரைப்படம் வெற்றிகரமா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தப்படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர்டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ போன்ற திரைப்படங்கள் இந்த வருட இறுதிக்குள் வெளிவரயிருக்கின்றது. மேலும் சூப்பஸ்டார் ரஜனிகாந்தின் ‘பேட்ட’ சிரஞ்சீவியுடன் ‘நரசிம்மரெட்டி’ போன்ற திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி வெற்றித்திரைப்படமாக மாறியது. இந்தநிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த...
தனது அணியில் டோனி 80 வயதானாலும் விளையாடுவார் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால், அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் அவர் மீது விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்...
இந்திய அணியின் தலைவரும், ரன் மிஷின் என்றும் அழைப்படும் விராட் கோஹ்லி, இன்னும் சில ஆண்டுகள் தான் விளையாடுவேன் என கூறியுள்ளதால், ரசிகர்கள் அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர். கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோஹ்லி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேற்கிந்திய தீவு...