பதுளையில் தனியார் துறை பஸ்சொன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.பதுளை - பசறை வழியில் இரண்டாம் மைல் கல்லருகே மேற்படி சம்பவம் இடம் பொற்றுள்ளது.
பதுளை- பசறை வழியின் ஜயகம என்ற இடத்தைச் சேர்ந்த விமலாவதி என்ற 67 வயது நிரம்பிய வயோதிப பெண்ணே தனியார் பஸ்சில் மோதுண்டு பலியானகியுள்ளார்.
பதுளையிலிருந்து எல்லேயராவை என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்த தனியார் துறை பஸ் பாதையில் சென்ற...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணிமுதல்11 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது.
இதன் போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு , உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே,...
வியட்நாம் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.
வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித்...
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகள்: தமிழ் மொழிக்கு எந்த இடம் தெரியுமா?
Thinappuyal News -
அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும்.
இந்நிலையில் The American Community Survey நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் இந்திய மொழிகளில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி எது என்பதற்காக...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலத்தின் மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விண்கலம் தன்னுடைய ஆய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 22 கோடி கிலோ மீற்றர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அமெரிக்கா – புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கன்வரால் விமானப்படை நிலையத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டது.
சுமார் 560...
நாளாந்தம் அதிகரித்து வரும் அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாக இலங்கையர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் பொருட்களின் விலையில் பெரும் தாக்கும் செலுத்தியுள்ளது.
அதேநேரம் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும் அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில வாகனங்களின் விலை மூன்று இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
டொலரின் வீழ்ச்சி நிலை நீடித்தால்...
சினிமாவில் உயர்ந்ததும் அதிரடி கதைகளில் நடித்து தன்னை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்த ஆசைப்படும் கதாநாயகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி வித்தியாசமாக தெரிகிறார்.
விஜய் சேதுபதி தன்னை விட கதையை நம்புகிறார். இமேஜ் பார்க்காமல் என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிக்கிறார்.
இதனால் குறுகிய காலத்தில் சிறந்த நடிகர் என்று திரையுலகினரையும் ரசிகர்களையும் பேச வைத்து இருக்கிறார். பீட்சா விற்பவராக வந்த பீட்சா, ஞாபக மறதி உள்ளவராக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை...
கானாவில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கானாவின் வடக்கு பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளும் நிரம்பியுள்ளன. அந்த வகையில், புர்கினா பாஸோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணையும் நிரம்பியது. இதையடுத்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால்,...
தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நீரில் மூழ்கியதிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகு 400ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது 100 பேரை காப்பாற்றியுள்ளளோம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 200 பேர் வரை நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
படகில் இருந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை கண்டுபிடிப்பது கடினம் படகில் ஏறுவதற்கான படகுச்சீட்டை வழங்கிய நபரும் கடலில் மூழ்கி இறந்துள்ளார் என அதிகாரிகள்...
இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவிவரும் வரட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி மைத்திரபல சிறி சேனவின் பணிப்புரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் கலந்துரையாடியதன் பின்னர் இந்த நிவாரண பணிகளுக்காக 9,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரட்சியான காலநிலையால் வடமத்திய மாகாணத்தின் சுமார் 420,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான குடிநீர், உலர் உணவு உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களை...