(மன்னார் நகர் நிருபர்) தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்க படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் தொடர்பான மக்கள் சந்திப்பு மற்றும் ஆரம்ப நிகழ்வு மன்னார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் அமைச்சர் மனோகணேசனின் தேசிய அமைப்பாளர் விநாயக மூர்த்தி ஜனகன், மற்றும் வன்னி இணைப்பாளர் விமல் மன்னார் மாவட்ட தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர்களான...
-மன்னார் நகர் நிருபர்-   இந்திய அரசின் நிதி உதவியுடன் '1990'   எனும் அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை கடந்த யூலை மாதம் 21 ஆம் திகதி வடமாகாண ரீதியில் வைபவமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட 20 அம்புலன்ஸ் வண்டிகளில் மன்னார் மாவட்டத்திற்கு என 3 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டது. குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் மன்னார் மாவட்டத்தில் மன்னார்,மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய 3 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தமது சேவைகளை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயமல்ல எனத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அத்தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இப்போதைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவே ஆவார் என்றும் சுட்டிக்காட்டினார். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என அமைச்சர் ராஜித...
சேதம் ஏற்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தை பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியிருந்தது. எனினும் அதனை மாற்றிக் கொள்ளும் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள புதிய வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சேதமடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத பெருந்தொகை பணத்தை மத வழிப்பாட்டு இடங்களில் காணிக்கையாக வழங்கி கடவுளை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையினால் பாரியளவு மக்கள் கூட்டம் ஒன்று கதிர்காமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள்...
இலங்கையில் வழமைக்கு மாறாக அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதன் காரணமாகவே வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வெப்பமான காலநிலை இம் மாதம் 7ஆம் திகதி வரை தொடரும் என திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக வெப்பமான காலநிலை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என சுகாதார பிரிவு...
யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளது எனவும் , எதிர்வரும் ஆண்டுகளில், இந்த காணிகள் விடுவிக்கப்படலாம் எனவும்  யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், அக்குழுவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில், இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற்றம், நிதி ஒதுக்கீடு...
இலங்கை ரூபாவின் பெறுமதி, அமெரிக்க டொலருக்கு எதிராக என்றும் இல்லாத அளவிற்கு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அந்த வகையில், மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 162.7870 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர்  உயிரிழந்துள்ளார். வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முயன்ற வயோதிபர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் வண்டியை செலுத்திய நடராஜா ஜனார்த்தனன் படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சூசைப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த பேரம்பலம் திருச்செல்வம் வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை...
நுவரெலியாவில் தனியார் பேருந்துக்குள் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரினால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரம்பொட பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தென்னகோன் என்ற சாரதி மற்றும் கந்தபளை பிரதேசத்தை சேர்ந்த காசி விஷ்வநாதன் என்ற 31 வயதான நடத்துனருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவி...
பொலிஸ் திணைக்களத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் பிரிவுகளை, பெண் பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டங்கள் பொலிஸ் தலைமையகத்தால் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், பெண் பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 492 பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரிகளை நியமக்கும் போது இனி வரும் காலங்களில் பெண் அதிகாரிகளையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பெண்...