ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றிவரும் ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ, கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
பங்­க­ளாதேஷ் கிரிக்கட் அணியின்  துடுப்­பாட்ட வீரர் சபீர் ரஹ்­மா­னுக்கு 6 மாத கால சர்­வ­தேச கிரிக்கட் தடை விதித்து அந் நாட்டு கிரிக்கட் சபை அறி­வித்­துள்­ளது. சமூக வலைத்­தளம் ஊடாக ரசி­கர்­களை அவ­ம­திக்கும் வண்ணம் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக கூறி, அவ­ருக்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­யா­கவே இந்த 6 மாத கால சர்­வ­தேச கிரிக்கட் தடை விதிக்­கப்பட்­டுள்­ளது.  அதன்படி அடுத்து 6 மாதங்­க­ளுக்கு சபீர் ரஹ்­மானால் சர்­வ­தேச கிரிக்கட் போட்­டிகள் எதிலும்...
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வம், உடுவில் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் 9 கிராம் 639 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.   இதன்படி 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பேக்கரி உரிமையாளர்களின் நலன் கருதியே மேற்கண்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது சர்வதேச ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயது முஹமட் நிஜாம்டீன் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினர் என அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி  செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த...
கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையிலுள்ள தனியார் பேரூந்து நிலையத்தில் போலி நாணயத்தாள்களை மாற்ற முயற்சித்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் அம்பாறையை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் ஆவார். இன்று காலை 8 மணியளவில் கொழும்பு பெஸ்தியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றின் நடத்துனரிடம் 5000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சில்லறையாக மாற்றித் தருமாறு கோரியுள்ளார். இதன்போது, அந்த நாணயத்தாள் தொடர்பாக பேரூந்து...
கல்கிஸ்சைக்கும் - ரம்புக்கனைக்கும் இடையில் சொகுசு ஹிட்டாச்சி ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான கட்டணமாக 3000 ரூபா அறிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது ரயில் ஒவ்வொரு நாளும் காலை 8.30க்கு கல்கிஸ்சையில் இருந்து புறப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் மர்மமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண், தான் பாதிக்கப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார். அருகம்பே கடற்கரையில் தனக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். “நான் நண்பர்களுடன் இலங்கையின் அழகை பார்க்க வந்தேன். இலங்கை மிகவும் அழகான நாடு. எனினும் சில விடயங்கள் சரியில்லை....
யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவுக்கு தலைமை வகித்து வரும், அந்த குழுவின் ஆரம்ப தலைவரான “ஆவா” என்ற குமரேசரத்னம் வினோதன் என புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆவா என்ற வினோதன், அந்த குழுவின் ஆரம்ப உறுப்பினரான மோகன் அசோக் என்பவருடன் இணைந்து இந்த குழுவை வழிநடத்தி வந்துள்ளார். பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் தொழில்நுட்பங்கள் வழியாக இந்த குழுவினர் தொடர்புகளை கொண்டுள்ளனர் என...
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரால் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட பயணம் நிறைவடைந்துள்ளது. வவுனியாவிலிருந்து சுமார் 244 கிலோ மீற்றர் தூரத்தினை கடந்து நேற்று இரவு 7.00 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தினை குறித்த இளைஞன் சென்றடைந்துள்ளார். முயன்றால் முடியும் என்ற மனோநிலையுடன் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட வவுனியா, சூடுவெந்தபுலவை சேர்ந்த 31 வயதான மொஹமட் அலி என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார். முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்தியம்பும் வகையில் இந்த பயணத்தை...