மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தையடுத்து, அங்கிருந்தவர்கள்...
1980ல் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. குடும்ப பாங்கான இவரது நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் இருக்கும். தெலுங்கில் பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 16 வயதாக இருந்தபோது வெங்கட சுப்பையா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இது 6 மாதம் கூட நீடிக்கவில்லை. பின்னர் தீவிரமாக படங்களில்...
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது சுசீலீக்ஸ், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டதால் தனுஷ் கோபப்பட்டு பாதியில் கிளம்பிச் சென்றுள்ளார். விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் பிரபல தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டி எதிர்பாராத விதமாக பாதியில் முடிந்துள்ளது. சுசீ லீக்ஸ் பரபரப்பான போது தனுஷின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தனுஷை பேட்டி எடுத்த பெண்...
இலங்கையில் பொறுப்புணர்வு தேவைப்படுவதாக கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை நினைவுப்படுத்தும் உரையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை 24 முதல் 29ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் எண்ணற்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன. இன்று, கறுப்பு ஜூலையின் 34 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்வதற்காக, தமிழர்கள் மற்றும்...
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கமொன்றை அறிமுகம் செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இவ்வாறான ஒர் இலக்கத்தை அறிமுகம் செய்வதன் மூலம், வரி இலக்கம் உடைய அனைவரும் வரி செலுத்த வேண்டும். எனினும் நாடு என்ற ரீதியில் முன்னோக்கி நகரும்...
பொகவந்தலாவை கம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் உத்தியோகபூர்வ அறையில் காணப்பட்ட கணனி உதிரிப் பாகங்கள் களவாடப்பட்டுள்ளன. அதே பாடசாலையில் கல்வி கற்ற ஐந்து மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கணனி உதிரிப் பாகங்களை களவாடியமை மற்றும் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை பாடசாலை அதிபர் இந்த மாணவர்கள் மீது சுமத்தியுள்ளார். இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஹட்டன் பொலிஸ்...
தாதியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில கோரிக்கைகள் முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதியின் பின்னர் கடுமையான தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகுதி அமெரிக்க டொலர்கள் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து பார்சல் முறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டொலர் தொகை ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பார்சலில் பத்திரிகைகளில் சுற்றப்பட்ட நிலையில் 12,500 அமெரிக்க டொலர் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட அமெரிக்க டொலர்களின் இலங்கை பொறுமதி 20 லட்சம் ரூபாய்...
யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதிபதி இளஞ்செழியன் மிக நீண்ட காலமாக எனக்கு நன்கு பரீட்சயமானவர். அவர் வவுனியாவில் அதியுச்ச யுத்த காலத்திலும் மிகத் துணிவாகவும், நேர்மையாகவும் தன்னுடைய நீதிச் சேவையினை ஆற்றி வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம். எந்தவிதமான...
தேசிய அரசிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில், இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பல வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு...