“தோட்டாக்கு அஞ்சாது நீதி” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கி நீதிபதி இளஞ்செழினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் சட்டத்தரணிகளால் இன்று போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்திலும் பணி பகிஸ்கரிப்பிலும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற கட்டட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றும் சட்டத்தரணிகள் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் அனைத்து...
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் இன்று அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று(24) காலை முதல் மன்னாரில் இருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. பாடசாலை மாணவர்கள்,...
வலிகளே வாழ்க்கையாய் போன தமிழ் இனத்திற்கு வழி தேடியும், கறுப்பு ஜூலையில் உக்கிரத்தை உலகறிய செய்யவும், சமகால அரசியல் நிலையை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாகவும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் 34ஆவது கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுமுன்னெடுக்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானிய மண்ணில் No - 10, Downing street முன்றலில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களின்...
  நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது, அவரது நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித தளர்வினையும் ஏற்படுத்தக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, துப்பாக்கி பிரயோகத்தை...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தையடுத்து, அங்கிருந்தவர்கள்...
1980ல் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சரிதா. குடும்ப பாங்கான இவரது நடிப்பு அனைவரையும் சொக்க வைக்கும் வகையில் இருக்கும். தெலுங்கில் பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமகி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 16 வயதாக இருந்தபோது வெங்கட சுப்பையா என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. இது 6 மாதம் கூட நீடிக்கவில்லை. பின்னர் தீவிரமாக படங்களில்...
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது சுசீலீக்ஸ், குடும்ப பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டதால் தனுஷ் கோபப்பட்டு பாதியில் கிளம்பிச் சென்றுள்ளார். விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றனர். அப்போது தனுஷ் பிரபல தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டி எதிர்பாராத விதமாக பாதியில் முடிந்துள்ளது. சுசீ லீக்ஸ் பரபரப்பான போது தனுஷின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தனுஷை பேட்டி எடுத்த பெண்...
இலங்கையில் பொறுப்புணர்வு தேவைப்படுவதாக கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை நினைவுப்படுத்தும் உரையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை 24 முதல் 29ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் எண்ணற்ற பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் இடப்பெயர்வுகளும் இடம்பெற்றன. இன்று, கறுப்பு ஜூலையின் 34 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்வதற்காக, தமிழர்கள் மற்றும்...
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனைத்து பிரஜைகளுக்கும் வரி இலக்கமொன்றை அறிமுகம் செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இவ்வாறான ஒர் இலக்கத்தை அறிமுகம் செய்வதன் மூலம், வரி இலக்கம் உடைய அனைவரும் வரி செலுத்த வேண்டும். எனினும் நாடு என்ற ரீதியில் முன்னோக்கி நகரும்...