கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடம் இருந்து 1300 மில்லிகிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, சந்தேக நபரை நேற்றைய தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன்போது, சந்தேக நபருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலாவுக்கு சென்ற போது அங்குள்ள மண், கல் துகள்களை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை மதிப்பு 26 கோடி ரூபா) அளவுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருப்பது, நிலாவில் மனிதர்களை களமிறக்கியது தான். 1969-ம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் நீல்...
முல்லைத்தீவு - மாந்தை பகுதியில் 9 நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் நீர்ப்பாசனக்கால்வாய்கள் புனரமைப்பு வேலைக்கள் ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்தப் பணிகள் நடைபெற்று வருவதாக பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நாகராஜா சுஜீபரூபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள 9 நீர்ப்பாசனக்குளங்களின் புனரமைப்பு வேலைகளுக்கும் மற்றும் நீர்ப்பாசனக்கால்வாய்கள் புனரமைப்பு ஆகிய வேலைக்களுக்காக இரண்டு கோடியே 77 இலட்சம் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. தேசிய...
தெற்கில் புரட்சியில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ததுபோல், அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்தை அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமற்போனோர் விடயங்கள் என்பவற்றில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது. நல்லாட்சி அரசு தள்ளாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின்...
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரப் போக்குகள் குறித்து வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றுக்கு இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எழுத்துமூல முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது. இலங்கையிலுள்ள பிரிட்டன் தூதுவர் காரியாலயம், அவுஸ்திரேலிய தூதுவர் காரியாலயம், சீனத் தூதரகம் மற்றும் ரஷ்யத் தூதரகம் ஆகியவற்றுக்கு இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவீன் டீ சொய்சா தெரிவித்தார். இந்த முறைப்பாடு...
அனைத்து பல்கலைக்கழக மருத்துவப் பீடங்களின் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டாளரை இனந்தெரியாத குழுவொன்று வெள்ளை வானில் கடத்த முயற்சித்ததாக அந்த சங்கத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்க அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சைற்றம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்வொன்றை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறி சென்ற போது வெளியே வெள்ளை வானுடன் நின்ற சிலர் அவரை இழுத்துக்கொண்டு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்து...
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய நிலையில் மனுஸ் மற்றும் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழம் உள்ளிட்ட புகலிட கோரிக்கையாளர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர். இந்நிலையில், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் புகலிட கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளார். அத்துடன், புகலிட கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குறித்த அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படவுள்ளதாகவும் பீட்டர் டத்தொன் தெரிவித்துள்ளதாக சர்வதேச...
நெல்சிப் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் 128.78 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 14 கட்டடங்கள் திறக்கப்படவில்லை. பாவனையில் இல்லாமல் இருக்கிறது என வடமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 3 வருடங்கள் 9 மாதங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று நடை பெற்று வருகின்றது. இதன் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் இன்றளவும்...
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக அமைகிறது. அத்துடன், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தனித்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான இன்று மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும். ஆடிமாதத்தின் முதல் வெள்ளியன்று விரதம் இருந்து அம்மனை தரிசித்து சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் பிரார்த்தனை செய்து பலனை பெற்றுக்...
இந்திய சினிமாவில் கவர்ச்சியான படங்கள் மற்றும் பாடல்களில் தயக்கமின்றி நடித்து வருகிறார் சன்னி லியோன். சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் வருவதால் இந்தியாவிலேயே அவரும் அவரின் நண்பரும் தங்கிவிட்டனர். தற்போது இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றே முக்கால் வயதாகும் நிஷா கவுர் என்ற குழந்தையை மகாராஷ்டிராவில் தத்தெடுத்துள்ளனர். "குழந்தையை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் தத்தெடுக்க முடிவு செய்துவிட்டோம்.மூன்றே வாரத்தில் எங்களுக்கு ஒரு குழந்தை...