தற்போதைய நாகரீக உலகில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை கயிற்றில் தூக்கிட்டு, துப்பாக்கியால் சுட்டு, தலையை துண்டாக வெட்டி, விஷ ஊசி செலுத்தி மற்றும் மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள்.
ஆனால், நாகரீகம் வளர்ச்சி அடையாத பழங்காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உயிருடன் அனுபவிக்கும் தண்டனை முறைகளை அறிந்தால் நமது ரத்த ஓட்டமே நின்றுவிடும்.
இவ்வாறு பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமான சில மரண தண்டனையின் வகைகளை...
இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்பார்களே தவிர கழுத்தை கவனிக்க மாட்டார்கள்.
இதன் விளைவாக அவர்கள் முகம் அழகாக இருக்கும், ஆனால் அவர்கள் அழகை கெடுப்பது முகத்திற்கு கீழே இருக்கும் கழுத்து கருப்பாய் தோன்றுவது தான்.
கழுத்தை பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இப்படி தொடர்ந்து...
இரண்டு உலகப்போர் மற்றும் நாஜிக்களின் சித்திரவதை முகாமில் இருந்தும் தப்பிய 113 வயது முதியவர் ஒருவர் Bar mitzvah எனும் மதச்சடங்கை முதன் முறையாக கொண்டாட ஆயத்தமாகிறார்.
Bar mitzvah எனப்படுவது யூத இனத்தவர்கள் கொண்டாடும் ஒரு சிறப்பு விழாவாகும். யூத சிறுவர்கள் 13 வயதை கடக்கும்போது குறிப்பிட்ட குடும்பத்தினர் இந்த விழாவினை மிக விமரிசையாக உற்றார் உறவினர்களை கூட்டி வைத்து கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் போலந்தில் பிறந்த இஸ்ரேல் கிறிஸ்டல்...
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 11 ஆயிரம் விரும்பங்களை (like) தாண்டியுள்ளார்.
அதற்கமைய 11 இலட்ச விருப்பங்களை கடந்த இலங்கையின் முதலாவது அரசியல் கதாபாத்திரமாக ஜனாதிபதி இணையம் ரீதியாக சாதனை படைத்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்றையதினமான 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,100,133...
ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து அண்மையில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் திகதி பதகிரிய நெல் களஞ்சியசாலையில் இருந்து 80 மூட்டைகள் நெல்லினை திருடியமை தொடர்பிலேயே...
‘காக்காமுட்டை’ படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார்.
இந்தி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு இயக்குனர் தனது படத்தில் ஒரு குத்து டான்ஸ் ஆடும்படி கேட்டுள்ளார். இதற்கு பெரிய தொகை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஐஸ்வர்யா இதற்கு சம்மதிக்கவில்லை. இயக்குனரை திருப்பி அனுப்பிவிட்டார் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப் பையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று கைது
Thinappuyal -
வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப் பையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அவுஸ்திரேலிய பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில், 23 வயதான அவுஸ்திரேலிய பெண்ணொருவர் வீதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது மேட்டார் சைக்கிளில் வந்த நபர்,...
நாட்டை மைத்திரி அல்லது ரணில் ஆகிய இருவரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்! -மஹிந்த ராஜபக்ஸ
Thinappuyal -
நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
விமல் வீரவன்ச ரொஹான் ரத்வத்தேயின் சகோதரர் ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவை மறக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுருத்த ரத்வத்தே மற்றும் விமல் வீரவன்ச போன்றோர் நாட்டுக்கு...
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினை ஜாதி, பேதம் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாகவும் ஜாதி, பேதம் காரணமாக ஆதரவற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் விதம் மிலேச்சத்தனமாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் காணப்படும் ஜாதி, பேதங்கள் பற்றி பலர் பேசுவதில்லை. வடக்கில் தற்போது மீண்டும் ஜாதி, பேதம் தலைத்தூக்கியுள்ளது.
கிணற்றில் தண்ணீர் அள்ளவும் மாயானத்தில்தமது சடலங்களை புதைப்பதற்கும் தற்போது ஜாதி தடையாகியுள்ளது...
யார் இந்த பேரறிவாளன்? எங்கிருந்து வந்தார்? ஏன் சிறைவாசம் அனுபவிக்கின்றார்? அப்படி என்ன குற்றம் செய்தார்? எப்போது விடுதலையாவார்? இவருடைய விடுதலையைப் போன்றே இவர் பற்றிய கேள்விகளும் நீண்டு கொண்டே செல்கின்றன.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரே இந்த தமிழ் மகன்.
விசாரணைக்காக 1991ஆம் ஆண்டு அழைத்துச் சென்ற பேரறிவாளனின் வாழ்வு அன்றுடன் அஸ்தமனமானது. அன்றிலிருந்த இன்றுவரை அவர் வாழ்வில் சந்தித்த...