நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர். மார்ஷியல் ஆர்ட் கலைஞர் என்று பன்முகத்திறன் கொண்டவர்தான் ஜாக்கி சான். ஹாங்காங்கில் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி சீன உள்நாட்டுப் போர் அகதிகளான சார்லஸ் (Charles) மற்றும் லீ-லீ சான் (Lee-Lee Chan) ஆகிய தம்பதியருக்கு பிறந்தார் ஜாக்கி, இவரது இயற்பெயர் “சான் காங்...
"நீரின்றி அமையாது உலகு" என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் "அழகின்றி அமையாது திரையுலகு" என்று கூறலாம். பருவத்தில் தொடங்கி அறுவதை எட்டினாலும் கூட திரையில் தோன்றிட அழகு தேவைப்படுகிறது. இல்லையேல் இந்த மாயாஜால உலகம் அவர்களை காணாமல் போக செய்துவிடுகிறது என்பது தான் உண்மை. அழகை மெருகேற்ற சிலை அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர், சிலர் கேரள இயற்கை வைத்தியத்தை நாடுகின்றனர். ஆனால், நமக்கு பிடித்தமான நடிகர் திடீர் என்று பொலிவுடனும்,...
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கின்னசில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் நோயால் தாக்கப்பட்டவர். இதனால் 24 வயதான இவருக்கு முகம், உடல் என ஆண்களைப்போலவே முடி முளைத்துள்ளது. 11 வயதிலிருந்தே முடி வளரத்தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் ஷேவிங் செய்து வந்த இவர் 16 வயதில் அதை நிறுத்திவிட்டு வளர்க்க தொடங்கிவிட்டார். சீக்கிய பெண்ணான இவர் அவர்கள் முறைப்படி தலைப்பாகை...
தொழில்துறை திணைக்களம் மற்றும் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கைத்தொழில் கண்காட்சி வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 08.09.2016 அன்று அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மேற்படி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் இணைப்பு செயலாளர், மாகாணசபை உறுப்பினர்களான அ.ஜெயதிலக, செ.மயூரன்,...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக நெளுக்குளம், பாலாமைக்கல், கூமாங்குளம், அண்ணாநகர், தோணிக்கல், பம்பமடு, பாலமோட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தில் வைத்து வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பொது மலசல கூடங்களுக்கான நீர் விநியோகம் கடந்த ஒரு வாரகாலமாக உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பொதுமக்கள் மலசலகூடத்தை பாவித்துவிட்டு நீர்ஊற்ற முடியாத நிலையில் இருப்பதனால், மலசலகூடம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதனால் வேறு நபர்கள் அதைப் பயன்படுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, இதனைப் பிரதேசசபையிடம் தொடர்புகொண்டு வினவியபோது, நடைமுறைப்படுத்துவதாகக் கூறப்பட்டபோதிலும், மாலை 6.00 மணியிலிருந்து காலை 10.00வரை மலசலகூடங்களுக்கான நீர்த்தொட்டி இருந்தபோதிலும் அதற்கான நீரினை உரிய...
ஓட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் தண்டுவாண் கிராமத்தில் 08.09.2016 அன்று நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்களினால் பிள்ளையார் விக்கிரகத்தினை உடைத்து கீழிருந்த ஐம்பொன்களும், தங்க ஆபரணங்களும் களவாடப்பட்டு விக்கிரகத்தை வீசிவிட்டு சென்றடைந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கோபிகா, புளியங்குளம். .
தலவாகலை டயகம பிரதேசத்தில் 2013 ம் ஆண்டு ஒருவரை வெட்டி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணதன்டனை விதித்து நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட (தந்தை)  பெருமாள் மகாலிங்கம் வயது 60 (மகன்) மகாலிங்கம் சிவனேஸ்வரன் வயது 37 (மச்சான்), பாலகிருஸ்னன் சுவனேஸ்வரன் வயது 32 ஆகிய மூவருக்கே மரணதன்டனை 09.09.2016. மரணதன்டனை விதிக்கப்பட்டது. 2013.08.06 அன்று டயகம பொலிஸ்பிரிவிற்குட்பட்ட...
மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர், ஏற்கனவே அந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று விடுதலைப்பெற்றவர் என்று மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது. மஹிந்த தரப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மலேசியாவின் ஊடகங்கள் அவரின் பெயரை கலைமுகுந்தன் என்று குறிப்பிட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையிலேயே முகிலனே, விமானத்தளத்தில் வைத்து உயர்ஸ்தானிகரிடம் சென்று “மஹிந்த...
  மன்னார், பனங்கட்டிக்கோடு கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்பந்தாட்ட போட்டி ஒன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதை அடுத்து தாக்குதலுக்கு ஒள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார். இந்நிலையில் தொடர்ச்சியாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்று வந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் விசாரணைகளை...