மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் குவித்தமை தொடர்பில் உணவக விடுதி உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரான எஸ். ரவிதர்மா, பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தைச் சென்று பார்வையிட்டபோது அங்கு இரவோடிரவாக பாரிய சாக்கடைக் கழிவுப் பொதிகள் கொட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து பொதுமக்கள்...
துருக்கியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
துருக்கியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கையை சேர்ந்த யாத்ரீகர்களும் இந்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
காஸியான்டிப், இஸ்தான்புல் போன்ற நகரங்களிலுள்ள ஐ.எஸ்.ஸின் ரகசிய உள்ளூர்...
இலங்கையில் இருந்து இஸ்ரேலிற்கு பணியாற்ற சென்ற நபர் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் வீடு ஒன்றை சுத்தம் செய்வதற்காக சென்ற நிலையில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
சந்தேகநபர் சட்டவிரோதமான முறையிலேயே அங்கு பணியாற்றி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெருசலத்தில் வாழ்ந்து வரும் உதிசா பிரியங்கார என்ற 46 வயதுடையவரே...
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடுகின்ற உரிமையாளர்களே இவ் 16 குதிரைகளையும் பெற்றுக்கொண்டனர். இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் 16 குதிரைகளும் மேலதிகமாக கலந்துகொள்ள உள்ளன.
நுவரெலியாவின் குதிரைப் பந்தய போட்டிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களில்...
இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதன் பொறுப்பு தனக்கு அதிகம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பனாங்கொட இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதுடன், அவர்கள் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த வீரர்கள் என்று நிரூபிப்பதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும்...
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின்கீழ் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கில் உள்ள குளங்களில் வைப்பிலிடும் நிகழ்வின் ஒரு பகுதியாக மன்னார் கட்டுக்கரை குளத்தை மையமாக கொண்டு நன்னீர்மீன்பிடியில் ஈடுபடும் சங்கங்களுக்கு சுமார் 75000 மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு 22-08-2016 திங்கள் மாலை இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மத்திய மீன்பிடி அமைசர் மகிந்த அமரவீர அவர்களும், வன்னி...
தற்போதைய நல்லாட்சியிலும் நீதிமன்றம் சிற்சில அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் மோசடி, ஊழல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பலர் நல்லாட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு தனிப்பட்ட ரீதியில் எவருடனும் பிரச்சினைகள் இல்லை ஆனால், இந்நாட்டு மக்களை ஏமாற்றி பொதுமக்களது பணத்தை கொள்ளையடித்தவர்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தும் பொறுப்பு மக்கள் விடுதலை முன்னணிக்கு இருப்பதாலே இதனை தெரிவிக்கின்றோம் எனவும்...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம் மற்றும் தம்பசைன்சோலை போன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும் குடும்பங்களின் நலன்கருதி சுயதெழில் முயற்சிக்காக கடந்த 19.08.2016ம் திகதி அன்று ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலும் அது சார்ந்தவர்களும் ஜோதிடம் எனும் மாய வலைக்குள் சிக்குண்டவர்களாக இருக்கின்றனர்.
Thinappuyal -
இலங்கையின் அரசியலும் அது சார்ந்தவர்களும் ஜோதிடம் எனும் மாய வலைக்குள் சிக்குண்டவர்களாக இருக்கின்றனர். அறிவு சார்ந்த செயற்பாட்டுக்கு அப்பால் ஜோதிட பலமே அங்கு மேலோங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தின் மீதான தீவிர பற்றால் இன்று ஆட்சியை இழந்தார். தற்போது சமகால ஜனாதிபதியும் ஜோதிடத்தின் பின்னால் ஓடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு...
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் விசேட செயற்திட்டம்
Thinappuyal -
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது -
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடமாகாண சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (22.08) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் டாக்டர்...