கிழக்கு மாகாண  முன்னாள் முதலைமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சி .சந்திரகந்தனின் 41 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மட் ட க்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது  அலுவலகத்தில்இரத்த தான நிகழ்வு ஒன்று  இடம்பெற்றுள்ளது . தற்போது சிறை சாலையில் இருக்கும் சந்திரகாந்தனின்  தொண்டர்களால் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது . இந்த இரத்த தான நிகழ்வில் தமிழ் மக்கள்...
    கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட...
விடுமுறையை கழிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள கடற்கரைக்கு சென்ற குடும்பத்தினரை ராட்சத அலை ஆட்கொண்டுள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Newquay நகரில் அமைந்துள்ள Fistral கடற்கரைக்கு, விடுமுறையை கழிப்பதற்காக அப்பா அம்மா மற்றும் 3 குழந்தைகள் அடங்கிய குடும்பத்தினர் சென்றுள்ளனர். இவர்கள் 5 பேரும் கடலில் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி 17.20 மணியளவில் ராட்சத அலை எழுந்துள்ளது, அலையில் தாக்கம் அதிகரித்ததால், அதில் சிக்கிய இவர்கள், அருகில் இருந்த பாறையில்...
  ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும், ரமேஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதில் "எவ்வித சந்தேகமும் இல்லை" என இதனை ஆராய்ந்த முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு மனிதர் ஒருவரின்...
மன்னார், நானாட்டான், முசலி பிரதேசங்களுக்குட்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கான நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று 20.08.2016 காலை மோட்டைக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நானாட்டானில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.வசீகரன், ஐந்து மாவட்டங்களின் உதவி பணிப்பாளர்கள்,...
   கொட்டகலை ஸ்ரீ முத்துவினாயகர் ஆலய மதகுருவை லிந்துலை பொலிஸ் நிலைத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டதையடுத்து  அடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த தொண்டமான் அனியினரால்  பத்தனையில் பதற்ற நிலை தோன்றியது 20.08.2016 மாலை திடீரென பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த முன்னால் அமைச்சர் தொண்டமான் உள்ளிட்ட இ.தோ.கா குழுவினரால் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு படையெடுத்தனர் கடந்த 8.8.2016 அன்று கொட்டகலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டனியினரின் விளம்பர...
  வேலைசெய்யும் நாளொன்றுக்கு நூறு ரூபாய் என்ற குறைந்த கூலிக்கு தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை விற்பனை செய்வதுதான் சாதனையா? மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைசெய்த நாளொன்றுக்கு நூறு ரூபா இடைக்கால கொடுப்பனவு என்பது தோட்டத்தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையை மழுங்கடித்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திவிட்டு, அதை சாதனையாக சித்தரிக்கப்படுகிறது. என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் நோர்வுட் போற்றி தோட்டத்தில் நடைபெற்ற மக்கள்...
  " மன்னிப்போம்  - மறக்க மாட்டோம் " - இது ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர் . ஜெயவர்த்தனாவின் பிரபலமான கூற்று. 1987 ல் தம்முடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இந்திய ஆட்சியாளர்கள்  கொடுத்த அழுத்தங்கள் தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார், அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்காவின் இறைமையை மீறி இந்திய வான் படை விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை வீசியமை, கடல் வழியே உணவுப் பொருட்களை கொண்டுவர...
  மும்பை ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் 'தோனி,' கார்த்தியின் 'பிரியாணி' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலமே பிரபலமானார். 'கபாலி' படத்தை முடித்துக் கொடுத்து விட்டு ராதிகா ஆப்தே, 'பர்சேட்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர்வாண...
  யாழில் இரண்டரை கோடி பெறுமதியான் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களமும் பொலிஸாரும்  கடற்படையின் உதவியுடன்  130 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர் இதன் பெறுமதி சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சாவை மொத்தமாக விநியோகிக்க தயாராக இருந்த  5 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து யாழப்பாணத்திற்கு கஞ்சாவை கடத்தும் நோக்கில் கடலில் இந்திய படகில்...