கந்தையா அருந்தவபாலன்அவர்களின் மணிவிழா 17.08.2016 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரிசிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில்சிறப்புற இடம்பெற்றது.
Thinappuyal -0
கடந்த வருடத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்போட்டியிட்டு 40,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவரும், சாவகச்சேரிடிறிபேர்க் கல்லூரியில் நீண்டகாலம் அதிபராக சேவையாற்றிய கந்தையா அருந்தவபாலன்அவர்களின் மணிவிழா 17.08.2016 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரிசிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில்சிறப்புற இடம்பெற்றது.
மருதங்கேணி பிரதேச செயலரும் மணிவிழாக் குழுவின் தலைவருமாகிய க. கனகேஸ்வரன்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாநாயகரை வாழ்த்தினர்.
நிகழ்வில்...
இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும்.
புதிய நாடு, புதிய பயணம் மற்றும் ஐந்து வருடங்களுக்கான பயணத்திற்கு முதலாண்டு நினைவாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளனர்.
சமகால அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சலுகைகள், உரிமைகள்...
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் சில உறுப்பினர்களால் இது தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விஷ ஊசி ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கையினை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள்...
வேப்ப மரத்தின் இலைகள், காய், வேர் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டது.
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.
தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஓரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும்.
வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து, தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து...
உலகில் பெரும்பாலான நபர்களுக்கு தொப்பை பெரும் பிரச்னையாக உள்ளது, இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.
இதற்கு காரணமாக இருப்பது அவர்கள் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகாமல் இருப்பதே, அந்த உணவில் உள்ள கொழுப்புகள் வயிற்றிலேயே தங்கி தொப்பையை உண்டாக்குகிறது.
எனவே தொப்பை மற்றும் அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவாக இதனை உட்கொள்ளலாம்,
ஓட்ஸ்
ஓட்ஸ் சுவையாகவும், குறைவாக சாப்பிட்டாலே அதிக பசியை நிரப்பும் தன்மையும் கொண்டது. மேலும் இதில் அதிக அளவு...
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கலப்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியாது.
இந்நிலையில் உள்ளுர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கி விளையாடிய இலங்கை அணி, 3-0 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் கொழும்பில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இதன்போது, இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா களத்தில் விளையாடி கொண்டிருந்தார்.
சில்வா, 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவுஸ்திரேலியா வீரர் வீசிய பந்தை சந்திக்காமல் நேராக...
விஜய் ஆண்டனி நடித்தாலே அது தரமான படம் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம் வந்துவிட்டது. இவர் நடிப்பில் வந்த பிச்சைக்காரன் வசூல் வேட்டை நடத்திவிட்டது.
அதிலும் ஆந்திரா+தெலுங்கானாவில் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, தற்போது இப்படம் பாலிவுட்டிற்கு செல்லவிருக்கின்றது.
இதிலும் விஜய் ஆண்டனி நடிக்க, ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணாக பதக்கம் வென்றுள்ளார் சிமோன் மானுவல் (Simone Manuel). வெற்றியில் அவருக்கு சிரிப்பும் உற்சாகமும் வரவில்லை. மாறாக, கண்கலங்கி அழுதார்.
அவருடைய ஆனந்த கண்ணீருக்குப் பின்னால், அமெரிக்காவில் 1960 ம் ஆண்டு வரை, பொது நீச்சல் குளங்களிலும், முக்கியமான கடற்கரைகளிலும் கறுப்பின மக்கள் குளிக்கத்தடை இருந்த நினைவும் இருக்கிறது.
குளிக்க தடை
கறுப்பின மக்கள் மீது நடந்த கொடுமைகள் வரலாறு வைத்திருப்பதும் வைத்தில்லாததும் ஏராளம்....
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசாங்க சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.
கைதிகளை அடித்து துன்புறுத்தல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல் உட்பட உடல் மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தங்கள் கண்முன்னே கைதிகளை அடித்து கொலை...