புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார்.
உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த திகதி இந்தத் தகவலை வழங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் எழுத்து மூலம் கையளிக்குமாறும் சுகாதார அமைச்சர் கோரியுள்ளார்.
இந்த...
அரசாங்கம் பலவந்தமாக அனைத்தையும் செய்ய விரும்புகின்றது என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அரசாங்கம் எதேச்சாதிகாரமாக செயற்பட்டு வருகின்றது.
நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவே அரசாங்கம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றது.
நாட்டில் எவ்வித அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை.
கூட்டு எதிhக்கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறு எவரும் கூட்டு எதிர்க்கட்சியில்...
இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
இலங்கையிலுள்ள...
ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.சீ.ஐ.டி தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.
சேனாநாயக்க, இந்த கொலை விசாரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதியன்று தாஜூதீன் கிருலப்பனையில் வைத்து அவரின் காரில்இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975-ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு...
காணாமற்போனோர் பணியகத்தின் தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும். இந்த பணியகத்தின் ஆணையை நிறைவேற்றுவதற்குத் தேவைப்பட்டால், பிராந்திய பணியகங்களை அமைக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போனோர் பணியக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், இந்தப் பணிய கத்து க்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த வாரங்களில் காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அரசியலமைப்பு சபை தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்த 15...
நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற கொடிய போரின் வேதனையை அரசியலமைப்பி னால் மாத்திரம் குறைக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமா ரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்றுவரும் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு, நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, மக்களிடையே புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதற்கும் புதிய அரசியலமைப்பு...
ட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு நீதிக்கட்டமைப்பு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாணவேண்டி உள்ளதென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதித்துறை பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதுகுறித்து ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, இலங்கையின் நீதித்துறை குறித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, சட்டம் மக்களுடைய நம்பிக்கையை வெற்றிகொள்ள...
படவரைஞர் செய்த தவறால் ஒரே காணிகளை கொள்வனவு செய்த குடும்பங்கள் மத்தியில் வீடுகளுக்கான பாதை தொடர்பில் தகராறு இடம்பெற்றுவருவதாக குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவந்ததாவது
யாழ்ப்பாணம் நல்லுர் பிரதேசத்தில் அமைந்துள்ள தம்புலேன் ஆடியபாதம் வீதியில் சுமார் 10 பரப்பு காணி 6 குடும்பங்களுக்கு பிரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இக்காணி உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு விற்கப்பட்ட காணிகள் நில அளவையாளர் ஒருவரின்; உதவியுடன்...
கலப்படம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 575 கிலோகிராம் கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து நேற்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தலா 25 கிலோகிராம் நிறையுடைய23 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொத்தமல்லி எங்கு கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட பற்றுச் சீட்டை கொத்தமல்லியை ஏற்றி வந்த வர்த்தகர்கள் தம்வசம்...