இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவுச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டு...
வடக்கின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாங்கம், அதே முக்கியத்துவத்தை நிரந்த அரசியல் தீர்வுக்கும் வழங்க வேண்டுமென சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் சரியாக கையாண்டிருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் எம் மக்களும் எம்மோடு இன்று உடன் இருந்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற...
  மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பகுதியில் இன்று (11.08.2016) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இரு இராணுவ வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக பார ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்களுமே பலியாகியுள்ளனர். அனுராதபுரம் முகடவெல பிரதேசத்தைச் சேர்ந்த...
யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஐரீனா போகோவா, முதல்முறையாக ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை மறுதினம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ள யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் மற்றும் 2030 ஆம் ஆண்டு வரை நீடித்த அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் மேம்பாடு ஆகியவற்றுக்கான யூனேஸ்கோவின் ஒத்துழைப்பை அவர்...
  பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , தாம் இறுதி போரில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கொழும்புக்கு விசாரணைக்கு என அழைத்து சென்றனர். அங்கு விசாரணையின் போது நாலாம் மாடிக்கு அழைத்து சென்று சீனா நாட்டு...
  இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் குறித்த கிளை நிறுவனமானது இதுவரை 100 நாடுகளின் சந்தைகளில் குறித்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், அந்த நிறுவனமானது சுமார் 59 வருடங்களுக்குப் பிறகு தமது வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில்...
  கண்டி பிரதேசத்தில் நடாத்தப்பட்ட உளநல விருத்திக்கான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேகநபரான கண்டி வர்த்தகர் நிமல் பீரிஸை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான மஜிஸ்ட்ரேட் புத்திக ஸ்ரீ ராகல நேற்று (11) உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பிரதானியான சந்திமால் கமகே உடன் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு பெண்களையும் எதிர்வரும்...
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான வரலக்சுமி காப்பு நெடுங்கேணி மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலயத்தில் வெகு சிறப்பாக 12.08.2016 அன்று இடம்பெற்றது. மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலய பிரதமகுருக்கள் ஜெசுதக்குருக்கள் அவர்களினால் பூசைகள் இடம்பெற்று இந்த ஆண்டும் பெருந்திரளான பெண்கள் வரலக்சுமி காப்புக்கு பங்கேற்றுள்ளனர். பெண்களால் நல்ல கணவணை அடையவேண்டும் எனவும் குடும்பம் நிலைத்திருக்கவேண்டியும், நோய் நொடிகளின்றி நல்லசெல்வத்துடன் இருக்கவேண்டும் எனவேண்டி இந்துப் பெண்களினால் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கோபிகா, புளியங்குளம். .
வீட்டில் செல்லக்குழந்தைகள் இருந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கு இடமிருக்காது என்றே கூறலாம் ஆம் நம் வீட்டு செல்ல குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான். அதிலும் மழலையர் தொடக்க பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு அங்கு பல போட்டிகள் நடத்துவர். மாறுவேட போட்டி, நடனம் என அவைகளில் கலந்து கொண்டு நின்றாலே அதுவே பெற்றோர்களுக்கு பெருமையும் சந்தோஷம் கூடி கொள்ளும். அதிலும் மேடையேறி அவர்கள் செய்யும் ஒரு சின்ன அசைவோ அல்லது பேச்சோ...
ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று சீனாவை விடவும் ஒரு தங்கம் அதிகமாகப் பெற்றிருந்த அமெரிக்கா, இன்று 5 தங்கங்கள் அதிகமாகப் பெற்று முன்னிலை வகிக்கிறது. இதனால் அமெரிக்காவைத் தாண்டி முதலிடம் பிடிக்க சீனா கடுமையாகப் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதக்கப்பட்டியல்: