ஒலிம்பிக் போட்டியின் உச்சகட்டமே 100 மீட்டர் ஓட்டம்தான். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் உலகமே முடிவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் போட்டி இது. கடந்த 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் தொடரில் புல்லரிக்க வைக்கும் உச்சகட்ட மோதலுக்கு பென்ஜான்சனும் கார்ல் லீவீசும் தயாராக நின்றனர். உலகின் அதிவேக மனிதர் யார் என அடுத்த 10 விநாடிகளில் தெரிந்து விடும். கனடாவை சேர்ந்த பென் ஜான்சன் 100 மீட்டர்...
அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுமியை, சிறுமியின் சகோதரியின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர் அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவிலுள்ள குறித்த சிறுமி, பெற்றோரின் பராமரிப்பில் இருந்தபோது கடந்த 24 ம் திகதி காணாமல் போயுள்ளார். அத்துடன் சிறுமியின் சகோதரியின் 3 பிள்ளையின் தந்தையான 22 வயதுடையவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவர்...
பாரா சைலிங் சாகசத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பாராசூட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாரா சைலிங் எனும் சாகச நிகழ்ச்சி கடந்த 5-ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
பியூப்லா: மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். கிழக்கு மெக்ஸிகோவில் கனமழை காரணமாக பியூப்லா மற்றும் வெராகுரூஸ் பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியூப்லா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதேபோல், வெராகுரூஸ் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளையும் தங்கள் உடமைகளையும்...
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் வீடொன்றில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கட்டுகஸ்தோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரண்டாம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற இவரை இன்று காலை தீப் பற்றி நிலையில் பிரதேச மக்கள் மீட்டுள்ளனர். இதையடுத்து பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதுடன் பொலிசார் குறித்த சடலத்தை...
  புகையிரத பயணத்தின் போது வெளியேயிருந்து எறியப்பட்ட கல்லால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். அநுராதபுர போதனா வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வேலையின் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர் மீது வனவாசல – களனி புகையிரத நிலையங்களுக்கு இடையில் கல்வீச்சு தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த...
ரியோ ஒலிம்பிக் 2016ல் சனிக்கிழமை நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் சமீரின் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போட்டியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சமீருக்கு ரியோவில் உள்ள மருத்துவமனயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவைசிகிச்சை முடிந்து நன்றாக இருப்பதாகவும், காலை ஆறு மணிக்கு மயக்கம் தெளிந்து எழுந்ததாகவும் அவரது முன்னாள் அணி வீரர் ஹாமில்டன் ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்தார். அவர் காயமடைந்த வீடியோ அனைவரையும் சோகத்தில்...
வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனினும், வடக்கிலுள்ள தனியார் காணிகளைத் தாம் கையகப்படுத்துவதற்கான எவ்வித நகர்வையும் முன்னெடுக்கவில்லை என சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக மேலும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான எவ்வித தேவையும் காணப்படவில்லை...
ரியோ ஒலிம்பிக்கில்  தனது 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை, அமெரிக்க நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்சின் கணக்கில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் இருந்தன. போதுமென்ற மனதுடன் லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். ஆனால் அவரால் வீட்டில் சும்மா கிடக்க முடியவில்லை. அதே வேளையில் கடந்த 2013ம்...
சிலருக்கு வாய் அதிகமாக வறட்சியடையும். பொதுவாக வாய் வறட்சி அடைவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான் காரணமாக இருக்கும். ஆனால் ஒருவருக்கு வாய் அதிகம் வறட்சியடைவதற்கு அவர்களது உடலில் இருக்கும் வேறுசில பிரச்சனைகளும் காரணம் என்பது தெரியுமா? எனவே நீங்கள் அதிகமாக வாய் வறட்சியை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதற்கு முன் எதனால் எல்லாம் வாய் அதிகம் வறட்சியடைகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் மருந்துகள் சளி இருமலுக்கு...