ரியோ ஒலிம்பிக் 2016 ஒலிம்பிக் அட்டவணை
ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தானுக்காக சைக்கிளிங் பிரிவில் பங்கேற்ற முன்னாள் ஒலிம்பியன் ஒருவர், தற்போது லாகூரில் ஆட்டோ ஓட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
முகமது ஆஷிக் (81) என்ற அந்த முன்னாள் வீரர், 1960 ரோம் ஒலிம்பிக் மற்றும் 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் கலந்து கொண்டவர். அந்தப் போட்டிகளில் பதக்கங்கள் ஏதும் வெல்லாத போதிலும், ஒரு தேசிய நாயகனாக அவர் அப்போது புகழப்பட்டார்.
அத்தகைய நபர் இன்று, ஆட்டோ ஓட்டிப்...
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் (91) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ரியோவில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்லும் என உறுதியாக நம்புகிறேன். இந்திய அணி தங்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய...
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பியது மேற்கிந்தியத் தீவுகள்.
மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 171.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ரோஸ்டன் சதம்: முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் பின்தங்கிய நிலையில்...
“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி. ஆடை நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது. உலக நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கிய தமிழ்ச்சமூகம் உடையை மானம் காக்க உருவாக்கியது.
நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார குறியீடாக மாறி விட்டது.
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு நமது பாரம்பரிய உடையாக வேட்டி, சேலை இருந்து வந்தது. அவர்களின் வருகைக்குப்பின் நமது நடை, உடை, பாவனை என அனைத்திலும் அவர்களின் தாக்கம் அதிகரித்தது.
ஆனால், அவர்கள் இன்று...
மகிந்த கோரமுகத்துடன் சொல்வதை ரணில், மைத்திரி சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
Thinappuyal -
இலங்கை அரசு ஒப்புக்கொண்ட தீர்மானத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்ற நியாயப்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைகள்
மேற்கொள்ளப்படுமென்ற கருத்தினை...
நடைபெறவுள்ள ஆடி அமவாசை தினத்தில் உங்களின் நட்சத்திரங்களுக்கு நடைபெறப்போவது என்னவென்பதை சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவாகமஞானி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.
ஆடி அமவாசை தினம் தொடர்பான விளக்கங்களை லங்காசிறி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2009 இறுதியுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் அனைத்து படைக்கட்டுமாணங்களும் சீர்குலைந்துவிடாமல் செயற்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது.
குறிப்பாக விடுதலைப்புலிகளின் படையப் புலனாய்வுப்பிரிவு தமது பணிகளை திறன்பட செயற்படுத்தியுள்ளது என்பதற்குறிய ஆதாரங்கள் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இன்னமும் அழிந்துவிடாமல் கிடக்கின்றதை அவதானிக்கமுடிகின்றது.
அந்த வகையில் 29-03-2009ல் விடுதலைப்புலிகளின் படையப்புலனாய்வு துறைசார் செயற்பாட்டுக்கான அனுமதி அட்டையை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தின் ஒப்புதலுடன் களமுனை ஆளணி ஒழுங்கமைப்பு பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் நந்திக்கடல் தரையில் ஆவணம் ஒன்று தற்பொழுது ஆதாரமாக...
சென்னை- நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான்.
கைது செய்ய போலீசார் முயன்றபோது அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு...
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம்
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு போன்றன தொடர்பில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தற்போது இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி Joko "Jokowi" வை சந்தித்த போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.