நிர்ணய விலையான 495 ரூபாய்க்கு ஒரு கிலோ கோழி விற்பனை செய்யமுடியாது என அட்டன் நகரிலுள்ள  கோழி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர் அரசங்கத்தினால் அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதையடுத்து கோழி விற்பனைக்கான நிர்ணய விலையையும் அரசாங்கத்தினால் வெளியிட்டதையடுத்து அட்டன் பிரதேசத்திலுள்ள கோழி விற்பைனையாளர்கள்   கடையடைப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் > ஆர்பாட்டமானது மஸ்கெளியா பொகவந்தலா நோர்வூட் அட்டன் பகுதிகளை சேர்ந்த 100 மேற்பட்ட விற்பனை நிலையங்கள் 18.07.2016 திங்கட்கிழமை ...
   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்நிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து நிகழ்ச்சி நடாத்த வேண்டும் என ஒரு மாணவர் குழுவும், நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தாது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் குழுவுக்கும் கருத்து...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ம் திகதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீஸ்வரர் டொனால்டு டிரம்பும் மோதுவது உறுதியாகி விட்டது. இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்து...
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிங்கப்பூரில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு எதிர்வரும் 18ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென்னாசிய புலம்பெயர்ந்தோர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் அதில் இந்த மூவரும் பங்கேற்கவுள்ளனர். இந்தநிலையில் குறித்த மூவரும் தனியாக விசேடமாக குறித்து பலரும் வியப்பை வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சிராணி பண்டாரநாயக்க...
  அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள ஆதிக்க போக்கு காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் கல்வியை முழுமையாக கற்க முயவில்லை எனவும் இதை வெளிப்படுத்த கடந்த கால அனுபவங்கள் தடையாக உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்திகள் குறிப்பிடுகின்றன இன ரீதியான மத ரீதியான சடங்குகளை சிங்கள மாணவர்கள் முன்னிலைப்படுத்துவதாகவும் தமது ஆதிக்கத்தின் கீழ் பலக்லைக்கழக செயற்பாடுகளை மாற்ற முயற்சிப்பதாகவும் இதற்கு சிங்கள புலனாய்வுத்துறையினர் பாரிய ஒத்துழைப்பையும் பின்புலத்தையும் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இன்று விஞ்ஞான பீட புதுமுக...
அரசியல் சாசனம் தொடர்பில் ஆராய்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஊடகவியலாலர் சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து
  மறு அறிவித்தல்வரை யாழ் பல்கலை கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள விஞ்ஞானபீட மாணவர்களை வெளியேறுமாறும் நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டுள்ளது யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல் சம்பவங்களில் 10 மாணவர்கள்வரை காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்கலாச்சார...
  வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பி விளக்கமாக விளக்கிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்-நான் ஒரு ஜெனநாயக வாதி எனக்கு துப்பாக்கில தோட்டா போட தெரியாது
  நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் அவற்றில் நாடு வெற்றியை நோக்கி நகரவில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதிலாக மேலும் விரிசல்களை மேற்கொள்ளும் விஷமத்தனமான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்தோடி விட்ட நிலையிலும் எம்மால் இதுவரை தேசிய நல்லிணக்கத்தை...
  காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம் 14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீசார் இந்த ஏர் கன் சிறு குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டனர். இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது. அப்பெண்குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். ஜூலை 8...