அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் சிறைக்காவலர் மாரடைப்பால் அவதிப்படுவதை பார்த்த சிறைக்ககைதிகள் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்ட 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந் தனர். அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த ஒரே ஒரு காவலர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நிலைகுலைந்துள்ளார்.
இதைப் பார்த்த கைதிகளில் ஒருவர் கதவை உடைத்துள்ளார், அதன்பிறகு வெளியே...
மக்கள் போராட்ட பாத யாத்திரைக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரை கைதுசெய்து சிறையிலடைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில், இன்று உடுகம்பல பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மஹிந்தானந்த மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மேலும், இந்தப் போராட்டம் காரணமாக பயமடைந்துள்ள அரசாங்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைத் தடுக்க தயாராகி...
அழிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 24 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை திருடிய அதன் சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மத்திய வங்கியின் நாணய மாற்று பிரிவில் சேவையில் ஈடுபட்டுள்ளவர் என தெரியவந்துள்ளது.
அவர் நேற்று கொழும்பு, கோட்டை மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன முன் முன்னிலைப்படுத்தி போது இந்த மாதம் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது புதல்வியான தரணி சிறிசேன, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்று பட்டம் பெறவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர், வரும் 16ஆம் நாள் நாடு...
மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் ?
Thinappuyal -
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னிலையாகத் தவறிய நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, ஆணைக்குழுவினால், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியமை, விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காதமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில தினங்களில் தென்கொரியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில தினங்களில் தென்கொரியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது. பொது எதிரணி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள சூழலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தென்கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி...
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ் ரவ் இந்தவார இறுதியில் ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் போது கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ரஷ்ய தூதரகத்தையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.
ரஷ்ய...
இந்திய திரை உலகமே வியக்கும் விதத்தில் எடுத்துக்காட்டான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள், அபிஷேக் பச்சன்– ஐஸ்வர்யா ராய் ஜோடியினர். தங்களின் வெற்றிகரமான மண வாழ்க்கையின் பத்தாவது ஆண்டை இந்த நட்சத்திர தம்பதி நெருங்கும் நிலையில், இவர்களுக்கு இடையே பரஸ்பர புரிதல் எந்த அளவு இருக்கிறது என்று அறிய ஒரு ‘கேள்வி’ சோதனை.
ஒரே கேள்வியை இருவரிடமும் தனித்தனியே கேட்டபோது…
எந்த மாதிரியான ஆடைகளை அணிய உங்கள் துணை விரும்புவார்?
அபிஷேக்: இந்திய ஆடைகள்,...
விளையாட்டில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் அதிகமாக உள்ளனர் எனவும், விளையாட்டின் மூலமும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து திறந்துவைத்து உரையாற்றியபோதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”தேசிய விளையாட்டுக்களில் வடக்கு, கிழக்கு இளையோரும் பங்குபற்றி பிரகாசிக்க, தற்போது அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு, விளையாட்டுக்கு...
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். டாக்டர் வசந்த பண்டார
Thinappuyal -
கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டுமானால் இலங்கைக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கவே கச்சதீவை மீட்போம் என்ற விடயத்தை ஜெயலலிதா முன்வைக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் கூறுகையில், 1976 ஆம் ஆண்டு இந்திய பிரதமரான இந்திராகாந்தியால்...