பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெருநகர பொலிஸ் அதிகாரியின் மோட்டர் பைக்கில் ஜாலியாக ஏறி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இளவரசி ஆனி கப்பற்படையின் தேசிய அருங்காட்சியத்திற்கு வந்திருந்தார். இதற்காக இளவரசி கேட், இளவரசர் வில்லியம் மற்றும் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அருங்காட்சியகத்திற்கு வந்த வேலையை முடித்த இளவரசி ஆனிகென்சிங்டன் அரண்மனையில் இருந்து ஹெலிகொப்டரில் கிளம்பினார்.
இதன் பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெருநகர பொலிஸ்அதிகாரியின் மோட்டர்...
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 13 வயதுடைய சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி நிர்பயா என்னும் இளம் பெண் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் 13 வயதுடைய சிறுமி மிருகத்தனமாக பாலியல்...
சமூக வலைத்தளத்தையே நேற்று ஒரு செய்தி பரபரப்புக்குள்ளாக்கியது. அது வேறு ஒன்றும் இல்லை இயக்குனர் முருகதாஸ் தன் டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில்அஜித் புகைப்படத்தை வைத்தார்.
இதை தொடர்ந்து இருவரும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் முருகதாஸ் தரப்பிலிருந்து ‘அஜித் மீது இருந்து மரியாதை நிமித்தமாக அந்த புகைப்படத்தை வைத்தேன்.
ஆனால், நானும் அஜித்தின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறேன், அவர் ஓகே சொன்னால் நான் படம் இயக்க ரெடி’ என அவர்...
சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு இதுவரை வெளிவந்த அனைத்து சிம்பு படங்களை விட அதிகம்.
இந்நிலையில் யுடிவி நிறுவனத்தின் முன்னாள் தென்னிந்திய மேலாளர்களில் ஒருவரான தனஞ்செயன் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை பார்த்துள்ளார்.
படம் பார்த்து முடித்த பிறகு ‘இது நம்ம ஆளு படம் நன்றாக உள்ளது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இது நம்ம படம்பா என்று மகிழ்ச்சியுடன்’ கூறியுள்ளார்....
விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார்.
இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு தோல்பட்டையில் பலத்த அடி விழுந்துள்ளது.
வலி தாங்க முடியாமல் விஷால் துடிக்க, உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு விஷாலை அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் அஜித்துடன்நடிக்க ஆசைப்படுவார்கள். அந்த வரிசையில் பிரபல தயாரிப்பாளர்+நடிகர் R.K.சுரேஷ் தன் விருப்பத்தை கூறியுள்ளார்.
தாரை தப்பட்டை, மருது படங்களில் வில்லனாக மிரட்டிய R.K.சுரேஷ் நம் சினி உலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார்.
இதில் பேசிய R.K.சுரேஷ் ‘எனக்கு அஜித் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும், இது தான் என் விருப்பம்’ என கூறியுள்ளார். பேட்டியை முழுமையாக காண இதோ....
கபாலி படம் விண்ணை முட்டும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத அளவிற்கு நடந்து வருகின்றது.
ஏற்கனவே அமெரிக்காவில் ரூ 8 கோடி வரை இப்படம் வியாபாரம் ஆக, தற்போது கர்நடாகவில் இப்படம் ரூ 10 கோடிக்கு வாங்கியுள்ளார்களாம்.
படத்தை வாங்கியது லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் என கூறப்படுகின்றது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கிய அகிரா என்ற பாலிவுட் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அடுத்து இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து தமிழ்+தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு பட்ஜெட் ரூ 100 கோடி ஒதுக்கினர், சமீபத்தில் வெளிவந்த மகேஷ் பாபு படம் படுதோல்வியடைய, முருகதாஸ் படத்தின் பட்ஜெட் குறைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
விஷால் நடித்த மருது திரைப்படம் கிராமபுற பகுதிகளில் நல்ல வரவேற்பு அடைந்துள்ளது. இப்படம் சென்னையிலும் ரூ 90 லட்சம் வரை வசூல் செய்துவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
இப்படத்தின் பட்ஜெட் வைத்து பார்க்கையில் இவை அதிக வசூல் தான் என கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி விஷால் படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் மருது படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுனர் நெறிமுறைகளை அறியாது செயற்படுவதாகவும், தனது பணிகளில் தலையீடு செய்வதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ நிராகரித்துள்ளார்.
“நான் நெறிமுறைகளின் அடிப்படையில் செயற்படும் ஒருவர். அனைவரையும் மதிக்கிறேன். முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இருந்து சம்பூருக்கு உலங்குவானூர்தியில் ஏற்றிச் செல்ல மறுத்தது தொடர்பாக முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக...