சிவனொளிபாத மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சமன் தெய்வத்தின் திருவுருவ புனித பொருட்கள் 23.05.2016 காலை நல்லதன்னி பௌத்த விகாரையிலிருத்து வாகன பவனியாக பெல்மடுல்ல ரஜ மகா விகாரைக்கு எடுத்துசெல்லப்படுகின்றது.
சிவனொளிபாதைமலை பருவ காலம் 22 ம் திகதியுடன் நிறைவு பெற்றதையடுத்து பெல்மடுல்லை விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித பொருட்கள் மீண்டு கொண்டு செல்லும் வகையில் சிவனொளி பாதமலை உச்சியிலிருந்து புனித பொருட்கள் நல்லதண்ணி பௌத்த விகாரையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 23 ம் திகதி...
இளைய தளபதி விஜய் நடித்த தெறி வசூல் சாதனை செய்துவிட்டது. இப்படம் ஏற்கனவே ரூ 100 கோடியை கடந்து விட்டது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்து 6 வாரம் ஆகின்றது. இந்த 6 வாரத்தில் சென்னையில் மட்டும் தெறி ரூ 10.5 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே தெறி தான் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் நடிப்பில் கடந்த வாரம் மருது படம் திரைக்கு வந்தது. இப்படம் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மருது வெளிவந்த 3 நாட்களில் ரூ 83 லட்சம் வசூல் செய்துள்ளது.
ஹாலிவுட் படமான எக்ஸ்.மேன் ரூ 48 லட்சம், தெலுங்கு படமான ப்ரம்மோற்சவம் ரூ 45 லட்சம், 3 வார முடிவில் 24 படம் ரூ 4.8 கோடி...
தெறி, 24 என தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளார்சமந்தா. இவர் சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஒன்றில் கலந்துக்கொண்டார்.
இதில் இவரிடம் நீங்கள் ஒரு இளம் நடிகரை காதலிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘ஆம் நான் காதலிக்கிறேன் தான்.
விரைவில் இதுக்குறித்தே நானே கூறுவேன், மேலும், திருமணத்திற்கு ரெடியாகிவிட்டேன்’ என கூறியுள்ளார். யார் அந்த இளம் நடிகர்????.
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை படைத்துவிட்டது. ஆனால், இதற்கு முன் வந்த புலி படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் பேசியதை கலாய்த்து RJ ஷா ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
இதை கேட்ட விஜய் ஷாவை ’என்னய்யா இப்படி கிண்டல் பண்ணிருக்க, ஆனால்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் அடுத்த மாத முதல் வாரத்தில் வருகிறது என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படம் மலாய் மொழியில் டப் செய்து மலேசியாவில் வரவிருக்கின்றதாம், மலாய் மொழியில் டப் செய்யும் முதல் தமிழ் படம் இதுவே.
மேலும், ரஜினிகாக டப் செய்ய 200 பேரை ஆடிஷன்ஸ் செய்துள்ளார்களாம்.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வேதாளம். இப்படம் வெளிவந்து 6 மாதம் ஆனது.
இதனையடுத்து தல57 படத்தில் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தை பற்றி தயாரிப்பாளருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசியுள்ளார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியான ஜார்ஜியாவில் படமாக்கப்படவுள்ளது.
ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் தான் தொடங்கவுள்ளது.
நடிகை நமிதா கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடை திறப்பு விழாக்களில் மட்டும் கலந்து கொண்டிருந்த திடிரென இவர் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் சேர்ந்தார். கட்சி வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று தனது பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஊகடமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக மனுச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமரின் அரசியல் நன்மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் மனுச நாணயக்கார, தி ஹிந்து எனப்படும் இந்திய செய்தித்தாள் ஒன்றில் வெளியானதாக போலிச் செய்தி ஒன்றை இலத்திரனியல் ஊடகமொன்றில் நடைபெற்ற...
தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர். பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு 5 முதல் 13 வயது வரையிலான பாடசாலை மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Pithakkiart Witthayaபாடசாலையின் விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து மாணவிகள் காயமடைந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உறங்கிக் கொண்டிருந்த மாணவிகளே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.