யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மைக்காலங்களாக இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில்...
சம்பூர் - திருகோணமலை மக்கள் கிழக்கு மாகாண சபை முன்பாக அனல் மின் நிலைய அமைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். குறித்த போராட்டத்தை பசுமைத் திருகோணமலை அமைப்பு இன்று (26) ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் திரு.நாகேஸ்வரன் இன்றைய அமர்வில் சம்பூர் அனல் மின் நிலைய அமைவிற்கு எதிராக தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க...
யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் பெருமளவான வீடுகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன. இதனைவிட முகமூடி அணிந்த நபர்கள் அடங்கிய குழு வீடுகளில் திருட முற்பட்டதுடன் வீடுகளுக்கு வெளியே நின்ற வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் சேதமாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நகரிலுள்ள நான்கு வீடுகளுக்கு தொடராகச் சென்ற கொள்ளைக் கும்பல் வீடுகளுக்கு வெளியே இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம்...
  விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன் ருடே உடனான ஒரு பிரத்தியேக நேர்காணலில் முதல் தடவையாக, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உட்பட மிகவும் முக்கிய நபர்களாக கருதப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ குழுவினருக்கு எப்படி தானும் மற்றும் எஸ்.ரி.எப் பும் பாதுகாப்பு...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சமாதான யோசனையை தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கையளித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தம்மை அழைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் யோசனையை பிரபாகரனிடம் கையளிக்குமாறு கோரினார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை தம்மிடம் விடுக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க, தமது பாணியில் தீர்வு திட்டத்தை முன்னெடுத்தார். தாம்,...
  New pictures of the LTTE media TV newsreader Isaipriya alive have emerged.The Sri Lanka Ministry of Defence claims 53 Division troops killed Isaipriya during the last battle. Her name is in the Ministry of Defence’s published list – “Identified LTTE leaders who were killed on 18 May 2009 by 53...
  வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தாலும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரே தவிர எந்தவொரு நிழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என தென்மாகான முதலமைச்சர் ஷான் விஜேலால் கவலை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு நிகழ்விற்கும் அழைப்பு விடுப்பதில் பலனில்லை....
    இராணுவத்தினர் தனது கணவனை அரச பேருந்தில் அழைத்துச்சென்றதை பலர் கண்டு தனக்கு கூறியதாகவும், அவ்வாறு கணவருடன் அழைத்து செல்லப்பட்டவர்களின் தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் இராணுவத்தினரிடம் சரணடைந்த சாந்தகுமார் என்பவரது மனைவி வாசுகி சாட்சியமளித்துள்ளார். கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனது கணவர் ஆசிரியர் தொழில் செய்ததாகவும், விடுதலை புலிகளுக்கு பகுதி நேரமாக...
  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, குற்றப்புலனாய்வு பிரிவினரை நீதவான் கடுமையாக எச்சரித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு, இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வித்தியாவின் கொலை தொடர்பில் மற்றுமொருவரை கைதுசெய்யவுள்ளதாக, தாம் கடந்த வழக்கு விசாரணையின் போது தெரிவித்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினரை மேற்கோள் காட்டி வெளியான செய்திகளை சுட்டிகாட்டிய நீதவான், நீதிமன்ற...
  மதுபான விடுதியில் அழகிகள் நடனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மராட்டிய அரசை விமர்சித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’ கருத்து தெரிவித்து உள்ளது. அழகிகள் நடனத்துக்கு தடை மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனம் நடந்து வந்தது. குறிப்பாக தலைநகர் மும்பையில் உள்ள மதுபான விடுதிகளில் நடன அழகிகளோடு வாடிக்கையாளர்கள் கும்மாளம் போட்டு வந்தனர். இதனை கலாசார சீரழிவாக அரசு கருதியது. இதனையடுத்து மராட்டிய போலீஸ்...