முல்லைத்தீவு கச்சேரியில் 02.04.2016 சனிக்கிழமை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் விஜயம் செய்து முல்லை மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளை முற்று முழுதாக ஆராயந்தார். மேற்படி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சார்ள்ஸ், திரு.மஸ்தான், திருமதி.சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்...
  வவுனியா மாவட்டத்தில், ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான அத்தியாவசியக் கலந்துரையாடல், நாளை மறுநாள் (06.04.2016 புதன் கிழமை அன்று) காலை 10.00 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெறவுள்ளதாக, கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Searching,Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...
தன்னுடைய மகனின் கல்வி நிலை தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது என கூறி தாயொருவர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிர போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார். அனோமா எனும் தாயே இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். குறித்த தாய் தனது மகன் யசோதரவின் உடலில் காணப்படும் சிறிய குறைபாட்டால் கடந்த இரண்டு வருடமாக படிப்பை இழந்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், சிறுவனுக்கு குறும் பார்வை குறைவு மற்றும் காது சற்று குறைவாக கேட்கா தன்மையும் காணப்படுவதால்,...
ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், லாரன்ஸே இதை தன் பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை மூலம் லாரன்ஸ் இதுவரை 129 பேரின் அறுவை சிகிச்சைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது. சூப்பர் லாரன்ஸ்.
ஈழத்தமிழர்கள் கலைத்துறையில் பலரும் தற்போது சாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் மிக உயரிய விருதை வென்ற கமல்ஹாசனிடம் ஈழத்தமிழகர்கள் எப்படிப்பட்ட ஒரு படத்தை எடுக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அவர் ‘நிஜ சரித்திரம் என்பது வெற்றியாளர் சொல்வது மட்டுமில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும். யாருக்கும் அஞ்சாமல், ஒருபுறம் சாயமல், அரசியல் சூழ்ச்சியில் சிக்காமல் ஒரு உண்மையான படைப்பை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே...
ஜூனியர், மகளிர் டி20, ஆடவர் டி20 என மூன்று உலகக்கிண்ணத்தையும் ஒரே ஆண்டில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.11வது ஜூனியர் உலகக்கிண்ண (19 வயதுக்குட்பட்டோருக்கான) கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் ஜனவரி 22ம் திகதி தொடங்கியது. இதில் பெப்ரவரி 14ம் திகதி நடந்த இறுதிப் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல் நேற்று கொல்கத்தாவில்...
6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடர் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் 85 ஓட்டங்கள் குவித்த சாமுவெல்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். அதேபோல் தொடர் முழுவதும் அசத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக...
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய மர்லன் சாமுவேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஷேன் வார்னே மீதான பகையையும் தீர்த்துக் கொண்டார்.பிக் பாஷ் லீக் டி20 போட்டிகளின் போது ஷேன் வார்ன்- சாமுவேல்ஸ் மோதிக் கொண்டனர். இந்த மோதல் கைகலப்பு வரையும் சென்றது. இந்நிலையில் நேற்று ஆட்டம் முடிந்த கையோடு கால்காப்பைக் கூட அவிழ்க்காமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சாமுவேல்ஸ் தனது கொதிப்பைக் கொட்டித் தீர்த்து விட்டார். அவர் கூறுகையில்,...
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி பற்றி டுவிட்டரில் வலம் வரும் சில டுவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.CricInsider என்ற டுவிட்டர் பக்கத்தில் இறுதிப் போட்டி பற்றி சில டுவிட்டுகள் போடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இறுதிப் போட்டிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிராவோ 3 விக்கெட் எடுப்பார், 2 ஓவரில் கெய்ல் ஆட்டமிழப்பார், மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெறும் என அனைத்து சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், இந்தப் போட்டி ஏற்கனவே...
எதிர்மறை விடயங்கள் தான் டி20 உலகக்கிண்ண தொடரில் சாதிக்க பெரிதும் உதவியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக கிண்ணம் வென்றது. இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி "நான் முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள்...