மரத்தடியில் பிடித்துவைத்து சுட்டுக்கொல்லும் சிங்கள காடையர்கள் மற்றுமோ இனப்படுகொலைக்கான ஆதாரம்
புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ எடிட்டிங் உட்பட பல வசதிகளுடன் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகும்.தற்போது இம் மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இப் பதிப்பில் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை மீண்டும் பழைய நிலைக்கு (Undo Edits) மாற்றக்கூடிய வசதி கூடுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ் வசதியினைப் பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட போட்டோவினை சேமிக்கும்போது அது ஒரிஜினல் போட்டோவின்...
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு செல்ல இலங்கை அணிக்கு தகுதியில்லை என்று மேத்யூஸ் வேதனையாக தெரிவித்துள்ளார்.நடப்பு சாம்பியனாக டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் களமிறங்கிய இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 10 ஓட்டங்களால் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கவுக்கு எதிராக போட்டியிலும் இலங்கை தோல்வியைத் தழுவியது. லீக் சுற்றில் 4 போட்டியில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றது. இலங்கை அணியின் இந்த...
உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த ஆட்டம் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு (புதன்கிழமை) அரங்கேறுகிறது. நியூசிலாந்து அணி:- நியூசிலாந்து அணி நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை பெற்று வருகிறது. லீக் சுற்றில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்திருக்கிறது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்களே பக்கபலமாக...
இந்தியாவுக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் அதிரடியில் கலக்க தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் கூறுகையில், "இந்திய அணியில் பல மேட்ச் வின்னர்கள் உள்ளனர். இங்கு அவர்களை...
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமியின் கிண்டல் பதில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.டி20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. டி20 உலகக்கிண்ண தொடருக்கு முன் அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த தொடக்க வீரர்கள் ரோஹித், தவான் டி20 உலகக்கிண்ண தொடரில் மோசமாக ஆடி வருகின்றனர். அனைத்துப் போட்டிகளையும் கோஹ்லி, யுவராஜ், டோனி தான் கடைசியில் போராடி வெற்றி பெற வைக்கின்றனர். இதனாலே டோனி, “கோஹ்லி மட்டுமே...
  கடந்த அரசாட்சியில் தொண்டர் ஊழியர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி நிரந்தர நியமனங்கள் பெறாத ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் பாரபட்சமின்றி வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஜாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். சுகாதார தொண்டர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிய யுவதிகள் நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரை சந்தித்து தங்களுக்கான நியமனங்கள் குறித்து நேற்று கலந்தாலோசித்த...
தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ததும் அவற்றை இலவச சுகாதார சேவையின் ஊடாக விநியோகம் செய்ததும் பாரதூரமான குற்றம். அது அப்பாவி மக்களின் வாழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் விளையாடும் செயல். இது முற்றிலுமே ஏற்றுக் கொள்ள முடியாத பொறுப்பற்ற விடயம். இலங்கைக்குள் கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையைப் பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (COPE) நேற்று முன்தினம் பகிரங்கப்படுத்தியுள்ளது. இச்செய்தி இந்நாட்டு மக்கள் மத்தியில்...
கைத்தொழில், வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கவிஞர் ஒருவரின் வீடு தேடிச் சென்று மருத்துவச் செலவுக்கு பெருந்தொகைப் பணம்கொடுத்து உதவியுள்ளார். கிழக்கிலங்கையின் அம்பாறை மண் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு உரமிட்டு வளர்த்த மண்ணாகும். அதிலும் குறிப்பாக கல்முனை, பொத்துவில் பகுதிகள் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளாகும். எனினும் இங்குள்ள மக்களின் துன்ப, துயரங்களில் அக்கட்சியினர் ஒருபோதும் பங்கேற்பதோ, தேவையான உதவிகளை வழங்குவதோ இல்லை. இந்நிலையில் மிக நீண்ட காலமாக...
போர்ட் சிட்டி நிர்மாணிப்பால் தொழில் வாய்ப்பு இழந்த மீனவர்கள் அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கோரியுள்ளனர். போர்ட் சிட்டி நிர்மாண பணிகள் ஆரம்பித்த வேளை 3 இலட்சம் மீற்றர்கள் தூரத்திற்கு கடற்பிரதேசமானது மணல்களால் நிரப்பப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன்காரணமாக மீன் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் மீனவர்கள் பலர் தொழில்வாய்ப்பை இழந்ததற்கு இதுவே காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மணல்களால் கடற்பிரதேசம் நிரப்பப்பட்டதால் பவளப்பாறைகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பவளப் பாறைகளிலே மீன்கள் முட்டையிட்டு தனது இனத்தைப் பெருக்கும்...