சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சந்திரமுகி. இப்படம் சென்னையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில் பி.வாசு அடுத்து கன்னட படமான சிவலிங்காவை,சந்திரமுகி-2வாக தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இப்படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்திடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அவர் 2.0வில் பிஸியாகவிருக்க, இதில் லாரன்ஸ், அனுஷ்காநடிக்க, தற்போது பி.வாசுவின் மகன் ஷக்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் என்றால் ஷங்கர் தான். ஏனெனில் தேவையில்லாமல் எந்த இடத்திலும் வீண் கருத்துக்களை கூறமாட்டார். சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்ற படங்களை பற்றி புகழ்ந்து தான் கூறுவார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்திற்கு விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது. இதனால், கோபமான ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் தேசிய விருது குறித்து கூறியதை தன் பக்கத்தில் ஷேர் செய்து...
கோலிவுட், பாலிவுட் தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார்தனுஷ். இந்நிலையில் இவர் நடிப்பில் 4 வருடத்திற்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் 3. இப்படத்தை இவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். ரஜினி மகள், கமல் மகள் என படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதைவிட இப்படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார், இவர் இசையமைத்த ‘கொலைவெறி’ பாடல் உலக பேமஸ் ஆனது அனைவரும்...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் அஜித்துடன்பணியாற்ற விரும்புவார்கள். அப்படியிருக்க இளம் இயக்குனர்களுக்கு ஆசை இருக்காதா? என்ன, அந்த வகையில் இந்த லிஸ்டில் இளம் இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார். கே.வி.ஆனந்தின் உதவி இயக்குனர் சாய் கோகுல் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் வாலிபராஜா. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம் என கூறியுள்ளார்.
நேற்று அறிவிக்கபட்ட தேசிய விருதுகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியைதான் கொடுத்துள்ளது. ஐ படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பை பாராட்டி விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனபடுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றானர். இதுபற்றி இப்போது காமெடி நடிகர் விவேக் கவிதையாக ஒரு டிவிட் எழுதியுள்ளார், அதில் ' நீதான் எங்கள் விருது! உனக்கெதற்கு விருது?" என கேட்டுள்ளார். "நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை...
காஷ்மீர் தீவிரவாதிகளை மையப்படுத்தி 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் ரோஜா. இப்படம் பல விருதுகளை வாங்கி இந்திய அளவில் புகழ் பெற்றது. இந்த படத்தில் கண்கவரும் காஷ்மீர் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் நெஞ்சை அள்ளும் வகையிலும் த்ரில்லாகவும் தந்தார் மணிரத்னம். இவர் தற்போது கார்த்தி, சாய்பல்லவியை வைத்து இயக்கபோகும் படமும் ஒரு தீவிரவாதிகளை பற்றி மையமாக கொண்டது தானாம். மேலும் ரோஜா முலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான...
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றும் இன்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நடைபெறும் இவ் ஆணைக்குழுவின் விசாரணையில் நேற்று 311 பேருக்கு சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 163 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக 79 பேர் காணாமல் போனமை தொடர்பில் விண்ணப்பங்களைப் பெற்று பதிவு செய்துள்ளனர். இதேவேளை, இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்கு 218 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச்...
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள வரி அதிகரிப்பு,டொலரின் அதிகரிப்பு காரணமாக தமது தொழிற்துறை பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் முடிவுக்கு வந்தததாக இந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எனவே இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பாக நிதி அமைச்சிற்கும்,போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கமைய...
CC 450 என்ஜின் மோட்டார் வண்டிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மோட்டார் வண்டியின் பதிவு இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு அதனை சாதாரணமாக போக்குவரத்தில் பயன்படுத்த முடியும் எனவும் மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது பாதுகாப்புப்  பிரிவினர் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த என்ஜினையுடைய மோட்டார் வண்டியினை சாதாரண மக்களும் பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மோட்டார் வாகன திணைக்கள...