ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக சென்னை அணி முன்னேறியுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடந்த 2வது சுற்று அரையிறுதிப் போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. முன்னதாக புனேயில் நடந்த முதல் சுற்று அரையிறுதியில் சென்னை 3-0 என வென்றிருந்தது. இதனால் இந்த போட்டியை டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலையில் சென்னை களமிறங்கியது. அதேசமயம்...
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை மறுதினம் தெரிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக ஜனவரி 6ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய அணி, அங்கு ஜனவரி 12ம் திகதி முதல் 31ம் திகதி வரை இந்த தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நாளை...
எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல அந்த அணிக்கு உதவுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம். இதற்கான ஒப்பந்ததில் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே அவுஸ்திரேலிய ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த அணிக்கு உதவி உள்ளார். இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு பல ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார். உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும்...
விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் டோனி ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற டோனி ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை. நேற்று நடந்த கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் டோனி 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் அவரது அணி 44 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதே தொடரில் பஞ்சாப் அணிக்காக...
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணிகளுக்கு பதிலாக புதிய அணிகளாக புனே, ராஜ்கோட் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து 10 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் இருந்து 7 பேரும், ராஜஸ்தான் அணியில் இருந்து 3 பேரும் இந்த புதிய அணிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். புனே அணியில் டோனி,...
சூர்யா எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். இதனாலேயே இன்னும் ரசிகர்களின் மனநிலையை தெரிந்துக்கொள்ள டுவிட்டரில் இணைந்தார். தற்போது இவர் தயாரிப்பில் டிசம்பர் 24ம் தேதி பசங்க-2 படம் வெளிவரவிருக்கின்றது, இதற்காக இவர் ரசிகர்களிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளார். இதில் அவர் கூறுகையில் ‘தயவு செய்து பசங்க-2 படம் வெளிவரும் நாளில் திரையரங்கில் போஸ்டர், பேனர் வைக்காதீர்கள். நான் பலமுறை உங்களிடமே கூறியுள்ளேன், இதையெல்லாம் நான் விரும்பியதே இல்லை, அந்த பணத்தில்...
சிம்புவின் பீப் சாங் தான் தற்போது தலைப்பு செய்தியே. பெண்களை மிகவும் இழிவுப்படுத்திவிட்டார் என தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு எந்த வழக்காக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறிவிட்டார். தற்போது மலேசியாவை சேர்ந்த பெண், சிம்பு பீப் சாங்கிற்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இதோ உங்களுக்காக..  
பீப் சாங் சர்ச்சையில் அனிருத்தும் சிக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என அனிருத் முன்பே கூறிவிட்டனர். இந்நிலையில் நேற்று கனடாவில் இருந்து அனிருத் சென்னை திரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இசை கலைஞர்கள் அனைவரும் வர அனிருத் மட்டும் வரவில்லையாம். அவர் கனடாவிலேயே தஞ்சம் அடைந்தாரா? அல்லது டெல்லி, மும்பை என சென்றுவிட்டாரா? என பல கேள்விகள் சுற்றி வருகின்றது.
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் ஒரு சில மாதங்களுக்கு முன் வந்தது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி அமையவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திய அளவில் கூகுள் தேடலில் அதிக தேடிய படங்களில் புலி படம் 7வது இடத்தை பிடித்துள்ளது. விக்ரமின் ஐ படம் 5வது இடத்தையும் பிரமாண்ட திரைப்படமானபாகுபலி முதல் இடத்தை பிடித்துள்ளது
சந்தானம் தற்போது காமெடியன் என்பதை மறந்து முழுநீள ஹீரோவாகி விட்டார். இந்நிலையில் இவர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர்ஆனந்த் பால்கி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் தான் இசையமைக்கிறார் என கூறப்படுகின்றது. சந்தோஷ் நாரயணன் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் கபாலி படத்திற்கும், விஜய்-பரதன் இணையும் படத்திற்கு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.