சண்டேலீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக சீஐடியினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமக்கு தொலைபேசியால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களை கொண்டே இந்த தகவல்களை பெறமுடிந்ததாக பொலிஸ் அதிகாரியான பி.எஸ். திஸேரா கடந்த வாரம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதியன்று திஸேராவுக்கு காலை 7.42க்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வ கடமைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு செல்லும்போது இந்த அழைப்பு கிடைத்துள்ளது. தொலைபேசியின் மறுமுனையில் பேசியவர், தெளிவான சிங்களத்தில்...
  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாக உள்ள விடயங்கள்...
    இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் சேற்றில் சிக்கிய வாகனத்தை,...
பொலிஸார் தொடர்பில் கிடைத்துள்ள 120 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் உரிய முறையில் செயற்படாமை, விசுவாசமாக செயற்படாமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். அத்துடன் செயலாளர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு , இலக்கம் 09ஆம் கட்டிடம், மாநாட்டு மண்டப வளாகம், கொழும்பு 07 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என...
பண்டாரவளை கொஸ்லந்த அம்பகொலஹார பிரதேசத்தில் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்ச பயிரிட்டிருந்த நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கொஸ்லந்த காவற்துறையினர் மேற்கொண்ட தேடுதலில் 47 வயதான இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை காவற்துறையினர் தீயிட்டு அழித்துள்ளனர். நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக 6 கஞ்சா செடிகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார்.
இலங்கையுடனான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மரபு ரீதியான நட்பு நாடு என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் 70 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பௌத்த மதத்தை வழிபட்டு வருவதாகவும், இலங்கை பௌத்த சமூகத்துடன் சீனா சிறந்த தொடர்புகளை பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார். சீனத்தூதரக ஒத்துழைப்புடன் 100க்கும் மேற்பட்ட சீன பௌத்த துறவிகள் இலங்கைக்கு விஜயம்...
பதவிகளில் மீளவும் அமர்த்தப்பட்ட படையினர் இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு கட்டாய ஓய்வு மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட 40ற்கும் மேற்பட்ட படை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 201 படைஅதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலிலிருந்து 40க்கும் மேற்பட்டவர்களை மீளவும் பணியில் அமர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. படையினரை மீளவும் பணியில் அமர்த்துவது தொடர்பிலான...
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் விதமாக நடைபெறும் கலந்துரையாடலில் சர்வகட்சிகள் கலந்து கொண்டது நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உண்மையை கண்டறிதல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் போன்றவற்றை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள், செய்து கொண்ட ஒப்பந்தங்கள்...
யாரையும் பழிவாங்குவதற்காக சர்வதேச விசாரணையை கோரவில்லை- தர்மலிங்கம் சித்தார்தன்-  தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதற்காகவே சர்வதேச விசாரணையை கோருவதாகவும் யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கடந்து வந்த அரசாங்கம் எமது பிரச்சினையை தீர்க்க முன்வராததினாலேயே அதனை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை கண்டறியும் விசாரணைகளின் மூலம் மக்களின்...
சனல்4 இல் காண்பிக்கப்பட்டவைகள், வெள்ளைக்கொடிவிவகாரம் மற்றும் சரணடைந்தவர்கள் காணமற்போனது போன்ற சம்பவங்கள், யுத்தத்திற்கு வெளியே, இடம்பெற்ற தனித்தனி சம்பவங்கள், இவை குறித்து முழுமையான முடிவிற்கு வருவதற்கு ஆழமான விசாரணைகள் அவசியம். மேலும் இந்த தவறுகள் பாதுகாப்பு படையினரால் இழைக்கப்பட்டவை என்ற முடிவிற்கு நாங்கள் எந்த தருணத்திலும் வரவில்லை என மக்ஸ்வெல்பரணகம தெரிவித்துள்ளார். இலங்கையின் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் தான் உருவாக்கவுள்ள பொறிமுறையில் வெளிநாட்டவர்களிற்கு எத்தகைய...