ஊவா மாகாண அமைச்சராக செந்தில் தொண்டமான் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உட்பட புதிய அமைச்சரவை இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது.
மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டது.
நிதி, திட்டமிடல்,சட்டம், அமைதி, கல்வி, உள்ளூராட்சி, மின்வலு எரிசக்தி, நிர்மாணம், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக முதலமைச்சர் சாமர...
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அந்த நபர்களை கொலை செய்வதற்கான காரணம் தனக்கு தெரியாதெனவும் கிடைக்கின்ற ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டதனை மாத்திரமே தான் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் தகவல்...
இருவேறு பிரதேசங்களில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
30 வயது ஆசிரியர் பலி
கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த முப்பது வயதான கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் என்ற ஆசிரியர் ஒருவர், யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு...
முல்லை குமிழமுனை பகுதியில் முறையற்ற குடியேற்றம்: சாள்ஸ் நிமலநாதன் எம்பி நேரில் சென்று பார்வை
Thinappuyal -
முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் முறையற்ற வகையில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவரின் நியாயமற்ற செயற்பாட்டால் கையகப்படுத்த முஸ்லிம்கள் முயல்வதாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
முல்லைத்தீவு மக்களின் கோரிக்கையினை அடுத்து விடயம் தொடர்பாக ஆராய கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த குமிழமுனை பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நேரின் சென்று நிலமைகளை அவதானித்தார்.
டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளில் டெஸ்மன் சில்வாவின் உதவி பெறப்பட்டதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அவ்வாறான அறிக்கை வெளியிடப்படவில்லை. டெஸ்மன் சில்வாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவர் கூறியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
ஜெனிவா யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் சிலர் கருத்து...
ருஹுணை பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர்.
மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும் இணை சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் நேற்று காலி, கராப்பிட்டிய மருத்துவபீடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
ஆர்பாட்டத்தின் முடிவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்த மாணவர்கள், மருத்துவபீடத்தின் முன்பாக அமர்ந்து...
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக...
கனடாவின் பிரதமர், தாங்கள் ஈராக்கில் விமானத் தாக்குதல்களை நிறுத்தப் போகின்றோம் என்பதை ஒபாமாவிற்குச் சொல்லவிட்டார். புதிய வெளியுறவுக் கொள்கைகளை தொடர்பாக உலகம் அவரை ஆவலுடன் பார்த்திருக்கிறது.
தெரிவு செய்யப்பட்ட லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பல நிபுணத்துவ மேதைகள் இருக்கின்றார்கள்.
சட்டத்தரணியான ஹரி ஆனந்தசங்கரிக்கு உள்ள வாய்ப்புக்கள் என்ன என்பதை இன்றைய லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்தார்.
அமைச்சுப் பதவி கோரி ஜனாதிபதியின் பின் சென்றவர்கள் பதவி கிடைக்காத காரணத்தினால், எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு கூச்சலிடுகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிலர் ஜனாதிபதியின் பின் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.
பதவிகள் கிடைக்காத காரணத்தினால் எதிர்க்கட்சிக்கு சென்று, சபை நடவடிக்ககைளை குழப்பும் வகையில் கூச்சலிடுகின்றனர்.
இவர்கள் சில அமைச்சர்களின் பெயர்களை இழுத்து பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முயற்சிக்கின்றனர் என...
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.10.2015) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
அதன்போதே இதனைத் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் மரநடுகையைப் பெருமளவில்...