புரட்சிகர பெண்கள் வரிசையில் தமிழ் இனத்தின் விடிவிற்காக குரல் கொடுக்கின்ற யாழ்ப்பாணத்தில் அமைச்சர் அனந்திசசிதரன் ஒரு இரும்புப் பெண்மனி பூலான்தேவி, வீரலட்சிமி, அன்னைதிரேசா, கல்பனாசாகுல், நவநீதம் பிள்ளை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போன்றோர்கள் வரிசையில் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற அமைச்சர் அனந்தி சசிதரன் தற்பொழுது ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஆரம்பித்துள்ளார். அரசியலில் ஆணாதிக்கம் தலைதூக்கியுள்ள...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இவ் விரு அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றயீட்டு கைப்பற்றியுள்ளதுடன், இதில் ஒரு போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.
இதில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ்...
அவுஸ்திரேலியாவை சேர்ந்த புதுமண தம்பதி அமெரிக்காவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோசப் (28) மற்றும் பிரான்செஸ்கா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் அமெரிக்காவுக்கு தேனிலவு சென்றனர்.
தேனிலவுக்கு சென்ற இரண்டாவது நாள் ஹொட்டலில் இருந்த ஜிம்மில் பிரான்செஸ்கா சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்த அவரின் கணவர் ஜோசப் உடனடியாக மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார்.
அப்போது தான் பிரான்செஸ்காவுக்கு கடுமையான பக்கவாதம் தொடர்ந்து...
கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவ்வப்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஓய்வு எடுத்துவிட்டு தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு, நியூசிலாந்து நாட்டுக்கு செல்லவிருக்கிறார்கள்.
இது முதல் அரசுமுறை பயணம் என்பதால் தம்பதியினர், அதிக எதிர்பார்ப்புடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்கள்.
குறிப்பாக, கர்ப்பிணியாக இருக்கும் மெர்க்கல் தனது சிரமத்தையும் பொருட்படுத்தாமல், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அதிகமாக, மெர்க்கல் தனது கர்ப்பிணி வயிற்றை கையை...
மெக்சிகோவில் ஏற்பட்ட வெப்பவலய சூறாவளியில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பசுபிக் சமுத்திரத்திற்கு அருகிலுள்ள தெற்கு மெக்சிகோவின் ஒக்ஷாகோ மாநிலத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) விசன்டே சூறாவளி ஏற்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசன்டே சூறாவளியானது அடைமழையையும் இணைத்துக் கொண்டு வந்தமையினால் வெலி வெசினல் ஆறு பெருக்கெடுத்து அபாயமட்டத்தைக் கடந்தமையினால் அணை திறக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சூறாவளி, அதை தொடர்ந்து உருவான பாய்ந்தோடிய பாரிய வெள்ளம் என்பவற்றால்...
மெக்சிகோவிலுள்ள மதுசார தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மதுசார தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் போது தொழிற்சாலையிலுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் ஒருவர் எரிகாயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சூழ புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ, வான்வரை சுடர்விட்டு எரிந்ததாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா – ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்கான இப்பாலம் 68 மில்லியன் மக்களை இணைக்கின்றது.
இப்பாலத்தின் உதவியால் சீனா-ஹொங்கொங் இடையேயான பயண நேரம், 3 மணித்தியாலங்களிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.
இதனூடாக பயணம் செய்ய சிறப்பு வாடகைக் கார்களை பயன்படுத்த...
இந்திய விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.
இதன்போது இந்திய விஜயம் குறித்து ஜனாதிபதிக்கு பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 52 வயதுடைய சிற்றுண்டி கடை முதலாளியை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 4 இல் கல்வி கற்றுவரும் மேற்படி சிறுமி கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்று, பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள சிற்றுண்டிக் கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ளார்.
இதன்போது கடையில் எவரும்மில்லாத தருணத்தில் கடை...
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கேரள கஞ்சா பொதியுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்து காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று சந்தேகத்திற்கு இடமாக படகொன்றில் பொதிகளை ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்று அவர்களை கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதாகிய இருவரிடமிருந்த சுமார் 150 கிலோக்கும் அதிகமாக கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்கள் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...