வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி பயிற்சி வழங்கும் முச்சக்கர வண்டியும், காரும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா நொச்சிமோட்டையில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற சாரதி பயிற்சி நிறுவனமொன்றுக்கு சொந்தமான முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா நகரில் இருந்து சென்ற காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்ட பூனாவையை சேர்ந்த பிரேமவங்ச (வயது 40),...
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முச்சக்கரவண்டியொன்றில் எடுத்துச் சென்று கொண்டிருந்த வேளையில் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துவந்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசாரணைகளூடாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்  30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பிரதான சந்தேகநபர் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்...
வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 7 மணியளவில் கனகராஜன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் கைக்குண்டு, மகசீன் அதற்குரிய ரவைகள் 30 என்பன இருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அதனைப்பார்வையிட்டுள்ளதுடன் எவ்வாறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அப்பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பெண்கள் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு. ஆனால் சில பெண்களுக்கு இளம் வயதிலே முக அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு அழகை கெடுக்கும். எனவே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வை இங்கு காண்போம். எலுமிச்சை சாறு எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும். தேன் தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து...
ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகை கெடுப்பதை போன்று தோற்றமளிக்கும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். இது போன்ற பாதிப்புகளை தடுத்து, அற்புத பலனை பெறுவதற்கு, இயற்கையில் உள்ள சில வழிகளை பின்பற்றி வந்தாலே போதும். கன்னங்களின் அழகை அதிகரிக்க என்ன செய்யலாம்? தினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையாக சுத்தமான காற்றை சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவுகள் மின்னும். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு...
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் ரஜினி, அஜித் ஆகியோர். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். இந்த நிலையில் விஸ்வாசம் படம் பொங்கல் ரிலிஸ் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர், ஆனால், திடீரென்று தற்போது அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் தலையிலும் இடி விழுந்துள்ளது. ஆம், விஸ்வாசம் படத்துடன் ரஜினி நடித்த பேட்ட படமும் வரவுள்ளதாம், இதனால், பல திரையரங்கங்கள் வசூல் பாதிப்பு அடையும் என அச்சத்தில்...
தமிழ் சினிமாவில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து சரியான படங்கள் வெளியாகவில்லை என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது. அப்படி சொன்னவர்கள் எல்லோரும் திணறும் அளவிற்கு அடுத்தடுத்து மிகவும் தரமான படங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது. இதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் வசூல் விவரத்தை பார்ப்போம். வட சென்னை- ரூ. 3.06 கோடி (5 நாட்கள்) சண்டக்கோழி 2- ரூ. 1.92 கோடி (4 நாட்கள்) 96- ரூ....
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் லயோனல் மெஸ்சிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மூன்று வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, தற்போது கிளப் அணியான பார்சிலோனாவில் விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிவில்லா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி விளையாடினார். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மெஸ்சி அபார கோல் அடித்தார். அதன் பின்னர், 26வது நிமிடத்தில் எதிரணி...
இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில், டக்வர்த் லுவிஸ் முறைப்படி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 4ஆவது ஒருநாள் போட்டி பல்லேகலவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, இலங்கை அணியில் திக்வல்ல மற்றும் சமரவிக்ரம ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். வோக்ஸின் பந்துவீச்சில் சமரவிக்ரம...
கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும் என தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தபால் சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. கனடாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்ளான விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக...