மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 24 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து விட்டு இன்று அதிகாலை யாழ் நோக்கி சென்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு...
அம்பலாங்கொட பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்த ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான பணத்தை இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. தனியார் வங்கியிலிருந்து குறித்த பணத்தை திரும்பப் பெற்று மற்றைய வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டியே இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும் சந்தர்ப்பம் உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்கு எதிராக செயலாற்றும், கட்சியின் சட்டத்திட்டங்களை மீறும் ராஜபக்ஸ குடும்பத்தின் பல பதவிகள் பறிக்கப்படும். நாம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து யாரையும் நீக்க வில்லை. ஆனால் அவர்களின் பதவி மட்டும் பறிபோயுள்ளது எனவும் இசுரு தேவப்பிரிய...
கொட்டாஞ்சேனை, சென்.பெனடிக் மாவத்தை - 70ம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து உயிரிழந்திருந்த நிலை யில் மீட்கப்பட்ட தந்தை,மகள் மற்றும் மகன் ஆகியோரின் மரணத்தின் மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது. இது தொடர்பில் பல்கோண விசாரணை களை கொட்டாஞ்சேனை பொலிஸார் மற் றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த மூவரினதும் மர்ம மரணம்குறித்த தகவல்களை இரசாயன பகுப்பாய்வு அறிக் கையைத் தொடர்ந்துவெளிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர்...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட மூவரை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர்களை ஒரு மில்லியன் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிசாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு...
இரணைமடுக்குள அனைக்கட்டின் கீழ்புற வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு வெடிக்கும் நிலையில் உள்ள RGP செல் குண்டுகள் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குள வேலையில் ஈடுபட்டுள்ள சிங்கள தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளக்கட்டுமான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியாக இன்னும் இரு நாட்கள் இருக்கின்றன. இந்நிலையில் அனைக்கட்டின் கீழ்புற, மேற்புற சாய்வை புனரமைக்கும் வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இரண்டாம் கலிங்கு பகுதிகளில் செல்குண்டுகள் வெடிக்கும் நிலையில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்கஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்தாகதெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. இலங்கை தேயிலை சபையின் 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை திறைசேரிக்குசுவீகரிப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும்,அவ்வாறு இடம்பெற்றால் தான்பதவி விலகுவதாகவும் அமைச்சர் நவீன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே ஜனாதிபதி அமைச்சர் நவீனைஅழைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருவதால் பெருந்தோட்டத் தொழிலாளர்களும், பொதுமக்களும் அசௌகரியஙளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் 22.08.2016 திங்கட்கிழமை அதாவது இன்றைய தினம் காலை முதல் பெய்துவரும் கடும் மழையினால் அட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் சிற்றுன்டிச்சாலைகளிலும் நீர் நிரம்பியுள்ளதால் பொலிஸாரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர்...
நுவரெலியா குதிரை பந்தய திடல் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUN) ஏற்பாட்டில் (20.08.2016) குதிரை சவாரி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்வையிடுவதற்காக நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் கலந்துகொண்டதுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி தயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இரண்டு பாடல்களையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந் நிகழ்வில் குதிரை சவாரி (Horse Race) இசை நிகழ்ச்சி (Music Prugramme), ஆடை அலங்கார போட்டி (Fhaison...
கொத்மலை வௌண்டன் தோட்டத்தில் அனர்த்தத்தின் மத்தியில் வாழ்ந்துவந்த நீண்டகாலமாக வாழ்ந்துவந்த 58 குடும்பங்களுக்கு பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் கடந்த 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இடம்பெற்றது. அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கமைய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபாய்...