பருத்தித்துறைப் பொலிஸார் கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கும்படி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. கஞ்சா போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்படாத ஒருவர் தமக்குத் தகவல் தருபவர் என்று பொலிஸார்  கூறியிருந்த போதும் விசாரணையில் அவரே கஞ்சா கடத்தும் முக்கிய நபர் என்று தெரிய வந்தது. இந்த விடயம் நீதிமன்றில் அம்பலமானதைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணை மேற்க்கொள்ளுமாறு வடமாகாண...
விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்களில், சிறப்புரிமைகளைப் பெற்ற ஒரு சிலருக்கு மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி ஒதுக்கப்படுவது எவ்வளவு தூரம் நியாயமானது என பொதுமக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2016 ஆசிய சட்ட மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஆசிய பசுபிக் சட்ட மாநாடு ஸ்தாபிக்கப்பட்டு 50...
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இம்முறை கல்விப் பொதுத் தர சாதாரண  பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி தலைமையில்  இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கு விஞ்ஞான ஆசிரியர் வே.சுந்தரேஸ்வரன் , மற்றும் பிரபல ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் முதல் நாளான இன்று வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் மாணவிகள் இக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந் நிலையில்...
எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களை வழங்கும் போது சாரணர் மற்றும் கெடட் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட சாரணர் ஜம்போரியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார். மாணவர்களுக்கான பிரமாண்டமான அமைப்பாக உலக சாரணர் அமைப்பு திகழ்கிறது. இலங்கை சாரணர் தலைமையகம், கொழும்பு மாவட்ட சாரணர் அமைப்புடன் இணைந்து இந்த ஜம்போரியை ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெறும் சாரணர் ஜம்போரியில்...
சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதேச வைத்திய அதிகாரிகளால் தொடரப்பட்ட வழக்கு, மல்லாகம் நீதவான் ஏ. ஜூட்சன் முன்னிலையில் நேற்று கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடரப்பட்டிருந்தது. நீர் மாசடைந்தமை தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தரப்புகளால் முன்னெ...
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டும் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்ட போது அவருடைய அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் பொலிஸார் பெற்றிருந்தனர்.  ஏற்கனவே...
மடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது. நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு...
உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்காகவே நாம் முயற்சித்து வருகின்றோம். முன்னைய ஆட்சியாளர்களை போல் யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவி த்துள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் சட்டச் சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லோஏசியா’ ஆசிய சட்ட மாநாடு நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில்...
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று (சனிக்கி ழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற நிலையை அடுத்து...
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில் சட்டவிரோதமான மது உற்பத்தி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது  என கிராம மக்கள் தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடா்ந்து தருமபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினா்  வியாழக்கிழமை மாலை (11.08.2016)மேற்கொண்ட நடவடிக்கையின் போதே   2240 போத்தல் கோடாவும், கசிப்பு உற்பத்திக்கு  பயன்படுத்திய உற்பத்தி பொருட்களையும் கைப்ப ற்றியுள்ளனர். இதேவேளை தப்பிச்சென்ற கசிப்பு...