ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்த இந்திய குண்டு எறிதல் வீரர் இந்திரஜித் சிங்கின் "பி' மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடைய ஒலிம்பிக் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திரஜித்திடம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி பெறப்பட்ட ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரியை பரிசோதித்தபோது, அதில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து...
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்த நர்சிங் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், எந்தவித கவலையும் இல்லாமல் ஒலிம்பிக்கில் பங்கேற்குமாறும், நாட்டுக்காக பதக்கங்களை வெல்வதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார். அத்துடன், எனக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படாது என்று உறுதியளித்தார். என்னைச் சந்தித்து ஆதரவளித்ததற்காக பிரதமர்...
ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள் தொடங்கும்போது அனல் பறக்கும் அளவுக்கு பரபரப்பும், விறுவிறுப்பும் கூடவே தொற்றிவிடும். அதிலும் உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் களமிறங்கும் அதிவேக ஓட்டங்களான 100 மீ., 200 மீ., ஓட்டங்கள் மற்றும் 4ல100 மீ. தொடர் ஓட்டங்கள்தான் ஒலிம்பிக்கின் உச்சகட்ட "கிளைமாக்ஸ்'. கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ., 200 மீ. ஓட்டம், 4ல100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றிருக்கும்...
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் 62, சாமுவேல்ஸ் 37 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், முகமது சமி,...
சந்திரசேகர் - நடிகை விஜி (சரிதாவின் சகோதரி. தில்லுமுல்லு படத்தில் நடித்தவர்) தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். லவ்லின், மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமாப் பள்ளியில் நடிப்புக் கலையைப் பயின்றுள்ளார். தற்போது துபாயில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். லவ்லின் கதாநாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட இதர தகவல்கள்...
திரைப்படங்களில் புகை எச்சரிக்கை வாசகங்கள் காட்டுவதை ரத்து செய்ய வேண்டும் என இயக்குநர் ஷியாம் பெனகல் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது, புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகங்களை காட்டும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று...
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா அணிந்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான வைரமோதிரம் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரபல நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா. இவர் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் வசித்து வருகிறார். அக்ஷிதா- திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் ஆகியோர் திருமணம் கடந்த மாதம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், அக்ஷிதா ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் தெருவில் உள்ள ஒரு ஐஸ்கிரீம்...
புதுவை தென்றல் நகர் சின்னய்யன்பேட் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (48). கிரில் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவமணி (43), மகள் சங்கீதா (20). கடந்த 31ஆம் தேதி சங்கீதாவுக்கு பிறந்த நாள் என்பதால் ஆடை வாங்க நேரு வீதிக்கு, மகளுடன் தேவமணி வந்துள்ளார். ஆனால் அதன்பிறகு வீட்டுக்குச் செல்லவில்லை. இதனையடுத்து புருஷோத்தமன் டி.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தேவமணி தீவிர ரஜினி ரசிகர் என்று கூறப்படுகிறது. கபாலி படம்...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் தான் எழுந்து நடந்ததாக சுட்டுரையில் (டுவிட்டர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 14-ம் தேதி தனது சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி தற்போது மருத்துவமனையிலேயே...
துருக்கியில் கடந்த மாதம் தோல்வியில் முடிந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு மேற்கத்திய கூட்டாளி நாடுகள் ஆதரவு அளித்தன என்று அதிபர் எர்துவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறார்களா அல்லது தீவிரவாதத்தின் பக்கம் நிற்கிறார்களா என்று கேள்வியெழுப்பினார். வார இறுதியில்,கொலோன் நகரில் தனது ஆதரவாளர்களின் பேரணியில் காணொளி மூலமாக உரை நிகழ்த்த தன்னை அனுமதிக்காத ஜெர்மனியை அவர் கண்டித்தார். அவர் மேலும், நாடு கடத்தப்பட்ட மதகுரு பெதுல்லா...