படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை.
படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.
இவரது குடும்பம் இப்போதும் உடம்பில் வசித்துவரும் நிலையில், இவர் மிகவும் அபாயகரமானதாக எச்சரிக்கப்படும் படக்குப் பயணம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்திரேலிய மண்ணை அடைந்தார்.
அகதி...
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும், படிக்க வசதியில்லாததால் திருச்சி மாணவி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலக்குழுமணியை சேர்ந்த முத்துவீரன்-மலர்கொடி தம்பதியரின் மூத்த மகள் பிருந்தாதேவி. இவர் குழுமணி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் 486 மார்க் எடுத்தார்.
அதிக மதிப்பெண் எடுத்ததை பார்த்த ஆசிரியர்கள், பிருந்தாதேவியை பிளஸ் 2 படிக்க நாமக்கல் மாவட்டம், வினாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். முத்துவீரன்...
அன்பே ஆருயிரே.. இனி நாம் ஈருடல் ஓருயிர்… நீ தான் நான்.. நான்தான் நீ.. என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனம் பேசியதெல்லாம் அந்தக் காலம் பாஸ்.. இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்காக போட்டுத் தள்ளி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஆண்களும், அவர்களுக்குச் சமமாக பெண்களும்.
சென்னையில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆண்களை பெண்கள் போட்டுத் தள்ளுவதும் சமமான...
இராணுவத்திடம் சரணடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் சம்பந்தமாக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பெயர்ப் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.சம்புதீன் அறிவித்துள்ளார்.
போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 ஆட்கொணர்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே நீதிபதி இதனை கூறியுள்ளார்.
போரின் இறுதி நான்கு நாட்களுக்குள் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பெருந்தொகையான...
பிரான்ஸில் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலினால் இலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸிலுள்ள இலங்கை தூதுவராலயம் தகவல்களை சேகரித்து வருவதாக பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலொன்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு நாடாளுமன்ற...
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Thinappuyal -
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
“அண்மைக்காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் மரணத்தை தழுவி வருகின்றனர்.
இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது.
இவற்றை கருத்தில் கொண்டு முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை...
எருக்கலம்பிட்டி கல்லடி கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார், எருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இறால் பண்ணையினால் தாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலேறியினை குறுக்காக மறித்து சுமார் 3 கிலோ மீற்றர் பரப்பளவுடையதாக இந்த இறால் பண்ணையானது அமைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அப்பகுதியில் கடல் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த இறால் பண்ணையானது...
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன் இனந்தெரியாதோரால் கடத்தல்
Thinappuyal -
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன்
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று அட்டன் பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.அட்டன் நகர பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த மாணவன் ஒருரே
இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது அட்டன் நகரில் 14-7-2016
2106 மாலை 5 மணியளவில் புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்கு சென்று அட்டன்
டம்பார் வீதியில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன்
இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார். குறித்த
சிறுவன் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியொன்றில்
சென்ற நபர்கள் சிறுவனை பலவந்தமாக தூக்கி...
வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.
நேற்று காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு ,சந்திரகுமார், நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் சுதாகரன், கரச்சி பிரதேச செயலர்...
வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் 85 கிலோ கிராம் மரைமான் இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களை வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து சில உபகரணங்களையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றிய உபகரணங்களுடன் சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் நேற்று மாலை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
2 லட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்...