பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான் மூன்றவாது முறையாக திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது இம்ரான் கான் வெளியிட்டுள்ள தகவலில், தனது மூன்றாவது திருமணம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றது என விவரித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, எவரிடமும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினால், பெரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில்...
கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தானுடைய உதவி எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தொடர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். இந்திய கிரிக்கெட் அணியை தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திறம்பட வழிநடத்திச் செல்வார். அனில் கும்ளே மீது முழு நம்பிக்கை உள்ளது, நெருக்கடியான தருணங்களில் திறமையாக விளையாடுவது எப்படி என்பதை, அனில் கும்ளே, இந்திய...
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவுமாணவி வித்தியாவின் வழக்கில் சந்தேகநபர்களின் வாக்குமூலப் பிரதிகளைகுற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியால் முன்னிலையில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகள் குறித்த அறிக்கையினை சட்டமன்றதிணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். அதேவேளை, தங்களது விசாரணைகளுக்கு...
  மேற்குலக நாடுகள் தன்னை பழிவாங்குவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரமுல்லையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார். அத்தோடு, இராணுவத்தினரும் பொதுமக்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் கொள்கைகளை பின்பற்றவில்லையென்றும், பொதுமக்களை காப்பாற்றியே பிரச்சினைக்கு தீர்வுகண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர், தனிப்பட்ட சிலர் குற்றமிழைத்திருந்தால் அதற்கான ஆதாரங்களை...
  ஐரோப்பியஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று ஏறத்தாள 52வீதமான மக்கள் முடிவெடுத்து அதனை அரசும் ஏற்றுள்ள ஒரு பொழுதில் அவை எமக்கான சில கேள்விகளையும் சில பாடங்களையும் விட்டு சென்றுள்ளதையும் கவனித்தே ஆகவேண்டும். வரலாற்றின் ஒவ்வொரு சின்னம் சிறிய,பெரிதிலும் பெரிதான நிகழ்வுகள் எல்லாமே எப்போதும் எமக்கு சில, பல கேள்விகளையும் அதற்கு ஊடாக பாடங்களையும் தந்தவண்ணமே சென்று கொண்டு இருக்கின்றன.கவனிப்பது நம் பொறுப்பு. இந்த பிரித்தானியா வெளியேற்ற முடிவுக்கு பின்னால்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நிதிமோசடி விசாரணைப்பிரிவின் விசாரணைகளின் போது 70 மில்லியன் பணத்தை தான் எடுத்துள்ளதை நாமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பின்னரே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார். இது பற்றிய விசாரணைகள்...
சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவுகளின் மீதான மோகம் குறைந்து வரும் நிலையில் அதை மேலும் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறைச்சிக்காக மிருகங்களை கொல்வது உலக வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டைவிடவும் சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவு எடுத்துக்கொள்ளும் அளவு வெகுவாக சரிவை கண்டுள்ளது. ஆனால் அரசின் கணக்குகளின்படி கடந்த 2007-2013 ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில்...
கனடாவின் ஒன்ராறியோவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த மாகாண பொலிசாரின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மாகாண பொலிசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ஜூலை 11 ஆம் திகதி வரையான காலகட்டத்தில் சாலை விபத்துகளில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 6 எண்ணிக்கை மட்டுமே குறைவு. இதே நிலை நீடிக்கும் என்றால் 2016...
வடக்கின் பொருளாதார வலயம் வவுனியா நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்குள் தான் அமையவேண்டும் என்று நிபந்தனை விதிக்க மத்திய அரசிற்கு அருகதையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்துள்ளார். தமிழ்மக்களின் முக்கிய அபிவிருத்திப் பணி தொடர்பில் தாங்களே தீர்மானமெடுத்துவிட்டு தமிழ்மக்களிடம் திணிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் வழங்கியதெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் இழுபறிகள் இருந்தாலும், பின்னர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி இதற்கொரு முடிவு காணப்பட்டு...