தமிழக சட்டசபை தேர்தல் 2016! வாக்களித்த பிரபலங்கள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
Thinappuyal News -0
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம், வெவ்வேறு ஊடகங்கள் நடத்தியுள்ள Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு...
சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு சீரற்ற கால நிலை தொடர்பில் விழிப்பில் இருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உட்பட முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நிதியை ஒதுக்குமாறும் உரிய...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இன்று நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முதல் நட்சத்திரமாக தனது வாக்கை பதிவு செய்துவிட்டார்.
தல அஜித்
ஓட்டு போடங்க என்று இத்தனை நாள் கேட்டது போய் இப்போது நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம், நீங்கள் போடுங்கள் என்று கூறும் வசனம் தான் கேட்கிறது. இந்நிலையில் தன் ஜனநாயக கடமையை...
தேர்தல் இடாப்பு திருத்த மாதிரி படிவ விநியோகம் ஆரம்பம்.! மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
Thinappuyal -
2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இந்த வருடம் ஜூன் முதலாம் திகதிக்கு 18 வயதை பூர்த்தியாகும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் வாக்காளர் இடாப்பு பத்திரத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்வதற்கு முடியுமாகின்றது. அத்துடன்...
நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மலையகத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டாரளையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளதுடன் பனி மூட்டத்துடனான வானிலை காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை அதிக மழை காரணமாக பலப்பிட்டி களப்பை, அண்மித்த பாத்தமில்ல ஒவுலான – அந்தரவெல பகுதியில் 57 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...
வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு முழுயைமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய இராணுவப் படையினரும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக கமண்டோ படையினர் வாபஸ் பெற்றுக்கொண்ட போது சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக மஹிந்தவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட அதிரடிப்படையினரை அனுப்பி வைப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.
தற்போது நீக்கப்பட்ட இராணுவத்திற்கு பதிலாக, வேறு...
கச்சதீவில் ஆலயம் கட்டுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும், அனுமதியுடனும் கச்சதீவில் தேவாலயம் கட்டப்படுவது தொடர்பாக அருட்தந்தை குறிப்பிட்டார்.
கச்சதீவில் தேவாலயம் கட்டப்படுவது தொடர்பாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் அருட்தந்தை இவ்வாறு குறிப்பிட்டார்.
கச்சதீவு ஒப்பந்தத்தின்படி கிறிஸ்தவ தேவாயம் மாத்திரம் அப்பகுதியில் கட்ட முடியும் எனவும் அருட்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 1974 ஆம் ஆண்டு...
அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக மழை பெய்துவருவதால் அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரசபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
கச்சதீவில் புதிய தேவாலய கட்டுமானப் பணிகள், இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது.
இந்திய அரசின் அழுத்தங்களினால், கச்சதீவு தேவாலய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்குத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, நேற்றிரவு பிபிசிக்குத் தகவல் வெளியிட்ட, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி, காலநிலை உள்ளிட்டசில காரணங்களுக்காகவே, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது...