அட்டன் மஸ்கெளியா பிரதான பாதையின் நோர்வூட் பகுதியில் இடம் பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி பகுதியில் 03..05.2016 பகல் 2.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது
மஸ்கெளியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணிகளை ஏற்றிவந்த தனியார் பஸ் வண்டியானது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரினால் பாதையை விட்டு விளகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குளாகியுள்ளது காயமுற்றவர்களில் 12 பாடசாலை மாணவர்களும் 2 ஆசிரியர்களுமாக...
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகிய விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் கடந்த வாரமளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மூவரும், முறையாக புனர்வாழ்வு பெறாத நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரையும், மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான...
வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
விட்டமின் ஏ, பி, சி, டி,இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் முட்டையில் உண்டு.
மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.
உடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்களில் ஒருவரும், முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமாக துரைச்சாமி மதன்சிங், 3வது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
2016ம் ஆண்டிற்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இந்த மாதம் 2ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சுற்றுப் போட்டியில் பங்குகொள்ளும்...
கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட தவலங்தன்னை நகரத்தில் காணப்படும் பேரூந்து நிலையத்தின் பகுதிகள் கழற்றி அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேரூந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், செல்லும் பேரூந்துகள் நிறுத்தப்படுகின்ற நிலையில், இதனை நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
குறித்த பேரூந்து நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவரினால் கடை தொகுதி ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. இந்த கடைதொகுதி அமைக்கபட்டதினால்...
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆந்திரா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் குணசேகரனுக்கு 20 ஆயிரம் ரூபா (இந்திய மதிப்பில்) நட்டஈட்டை வழங்க வேண்டுமென ஆந்திரா அசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மஹிந்த...
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்து சாட்சியமளிப்பதற்கான இறுதி தினத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 27ஆம் திகதி முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு கொழும்பு விசேட மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்வதற்காக கொழும்பு – பித்தல சந்தியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்...
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்பறையும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் கல்வி...
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்து, அங்குள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களில் 24 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகத்தின் உதவியுடன் இவர்கள் இன்று அழைத்துவரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று நாடு திரும்புபவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் எழுவர் பெண்கள் என்றும் மீள்குடியேற்ற அமைச்சு...
அமைச்சுக்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களை வெளியிடும்போது, அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாதென, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணி தொடர்பில், கடந்த வாரம் ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து, நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின்போது, பிரதமர் கடும் தொனியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான அறிக்கைகளை வெளியிடும்போது...