இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது – பான் கீ மூன்
Thinappuyal -0
இலங்கை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் பங்களிப:பு பாராட்டுக்குரியது என அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை, ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமாதானம், பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்தி போன்றவற்றை உறுதி செய்வதில் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் இலங்கையும் இந்த முனைப்புக்களில் பங்கேற்று...
அரசியல் விவகாரங்களுக்கான ஐநா உதவி செயலாளர் நாயகம் மிரொஸ்லவ் ஜென்கா அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு
Thinappuyal -
தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் மிரொஸ்லவ் ஜென்கா சந்தித்து உரையாடியுள்ளார். இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கான ஐநா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி, நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் கீதா சபர்வால் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானத்தில்...
இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
Thinappuyal -
இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மெக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் உயிரிழப்பு பூச்சியமாக பேணப்பட்டது எனவும் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கடந்த அரசாங்கத் திட்டவட்டமாக அறிவித்து வந்தது.
எனினும், இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டது என்பது சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படையினர் வைத்தியசாலைகளின்...
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு அப்போதைய அரசாங்கத் தரப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு பணம் வழங்கியமைக்கும் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என எவராலும் மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை...
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலைகளை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டதாக உதாலகம அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாணவர் படுகொலைகளுடன் சீருடை அணிந்த தரப்பிற்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிசாங்க உதலாகம அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டார்கள் என்பதனை நேரடியாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை என்ற போதிலும், விசேட அதிரடிப்படையினரை சுட்டும் வகையிலேயே அறிக்கையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து...
இலங்கை தனிச் சிங்கள நாடு எனில், தமிழரைப் பிரிந்து செல்லவிடுங்கள்: -சுமந்திரன் ஆவேசம்
Thinappuyal News -
இந்த நாடு தனிச் சிங்கள நாடாக இருக்க வேண்டுமாயின் எங்களைத் (தமிழரை) தனியே விட்டு விடுங்கள். நாங்கள் சிங்களவர்கள் அல்லர், நாங்கள் சிங்கள இராஜ்ஜியத்திற்குரியவர்கள் அல்லர்.
நாங்கள் தமிழர்கள். எமக்குச் சொந்த மரபுரிமை உள்ளது. சிங்கள மக்கள் மட்டும் இறைமையை அனுபவிக்க வேண்டும் என்றால் நாங்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நீங்கள்தான் கூறுகின்றீர்கள்.
இலங்கை சிங்கள தேசம் என்றும் நீங்கள்தான் கூறுகின்றீகள். எம்மைப் பிரிந்து போகுமாறும் நீங்கள்தான் கூறுகின்றீர்கள்.
இவ்வாறு ஆவேசமாகத்...
16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும்
Thinappuyal News -
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கு கோஹ்லி விளாசிய 138 ஓட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தது.
இது பற்றி விராட் கோஹ்லி கூறுகையில், "தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினர். பவுண்டரிகளை எடுக்க விடாமல் தடுத்தனர். இதனால் ஒன்று மற்றும் 2...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 1ம் திகதி தொடங்குகிறது.
இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
துடுப்பாட்ட வீரர் செஹான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண்டர்சே மற்றும்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் இந்திய துணைத் தலைவர் கோஹ்லி (138) சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
வெற்றி பெற்ற போட்டியில் அணித்தலைவர் டோனி ஸ்டெம்பை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார். இந்நிலையில் அவர் எடுத்த ஸ்டெம்பை கோஹ்லியிடம் கொடுத்து இந்த வெற்றியை பரிசளித்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள்...