டாஸ்மேனியா காடுகளை உலக பாரம்பரிய தளத்திலிருந்து விலக்கக்கோரி ஆஸ்திரேலியர்கள் ஆர்ப்பாட்டம்
Thinappuyal -0
ஆஸ்திரேலியாவில் முந்தைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த தொழிற்சங்க கட்சியின் கோரிக்கைபடி டாஸ்மேனியாவில் உள்ள 1,20,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகள் உலக பாரம்பரியத் தளங்களில் இணைக்கப்பட்டது. நாளை தோஹாவில் வருடாந்திர உலக பாரம்பரிய குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்பு இணைக்கப்பட்ட டாஸ்மேனியா காடுகளில் 74,000 ஹெக்டேர் காடுகளுக்கு விலக்கு அளித்து அந்தப் பகுதியை மரத் தொழிலுக்குத் திறந்துவிடுமாறு 5000க்கும் மேற்பட்டோர் டாஸ்மேனியாவின் தலைநகரான ஹோபார்ட்டில்...
கிழக்கு சீனாவில் உள்ள ஜியான்சூ மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பழமையான கல்லறைகளை சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை கி.மு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த கல்லறைகள் ஜியான்சூ மாகாணத்தில் உள்ள பிசோயூ நகரத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தில் வடிகால் வெட்டும்போது கண்டுபிடிக்கப்பட்டதாக நான்சிங் மியூசியத்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர் மா யாங்கியாங் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்று...
உலகக்கோப்பை ஆக்கி போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மோசமான ஆட்டத்தால் முதல் 4 இடங்களில் இந்தியா வர இயலவில்லை. இந்நிலையில் 9-வது இடத்திற்கான போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் இன்று மோதின.
இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 9-வது இடத்தை பெற்றது. இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் 6 மற்றும் 50 நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தார். ருபிந்தர் சிங் 43-வது நிமிடத்தில் ஒரு...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஆப் டெத் ‘டி‘ பிரிவாகும். அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, இங்கிலாந்து உருகுவே மற்றும் கோஸ் டாரிகா அணிகள் இடம் பெற்றுள்ளன.
நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலி– இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
24 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இத்தாலி 9 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8...
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது போட்டி வருகிற 15-ந் தேதியும், 2-வது போட்டி 17-ந் தேதியும், கடைசி போட்டி 19-ந் தேதியும் மிர்புரில் நடக்கிறது.
இந்த போட்டிக்காக சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்டு சென்றது. இந்திய அணியில் கேப்டன் டோனி, துணைகேப்டன் விராட்கோலி, அஸ்வின்,...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றி ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 5.8 கோடி கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
இது இந்த ஆண்டில் நடந்த ஆஸ்கார் விருது குறித்து பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறியவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும். பிரேசில் ‘ஹீரோ’ நெய்மார் அடித்த முதல் கோல் பற்றி தான் பெரும்பாலானோர் வர்ணித்துள்ளனர்.
இதே போல் சர்ச்சைக்கு...
சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம்
Thinappuyal News -
வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பியதும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோதிட கணிப்பிபன்படி தற்போது கூடாத காலம் நடைபெறுவதால், நன்மை கருதி அரசில் செயற்பாடுகளைத் தவிர்த்து வெளிநாட்டில் தங்கியிருந்ததாகவும் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஜோதிட கணிப்பிற்கு அமைவாக எதிர்வரும் 29ம் திகதிக்குப் பின்னார்...
பாராளுமன்றத்தைக் கேட்டு அரசாங்கம் யுத்தம் நடத்தவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக 3 தடவைகள் பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதன் போது கூட பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
Thinappuyal News -
பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று நீங்கள் யுத்தத்தை நடத்தவில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 3 தடவைகள் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் ஆலோசனை நடத்தவில்லை. இந்தநிலையில் தற்போது ஐ.நா.விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பயனற்றதாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு எதிரான விசாரணையினை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரி பாராளுமன்றத்தில்...
பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வில் இன்று பயணிக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து வைத்து அதில், நரேந்திரமோடி பயணிக்கிறார். இதற்காக இன்றுகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவா விமான நிலையம் சென்றடைந்துள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்கு செல்லும் மோடி, கப்பலில் பயணிக்கவிருக்கிறார்.
'கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்க...
சென்ட்ரா பெய்டாஸ், இலங்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பிரச்சினை எழுப்பவுள்ளது. சென்ட்ரா பெய்டாஸ் தென் சூடானின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் போலியான அறிக்கை ஒன்றை தயாரித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை இலங்கைக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ளும் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விடயத்தை வைத்து சிறிலங்கா அரசாங்கம் இந்த குழு மீதான நம்பிக்கை தொடர்பில்...