உலகக் கிண்ணம் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண்டகீ மின்னல் வேக கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உலகக்கிண்ணம் தகுதிச் சுற்றுக்கான கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் எந்த ஒரு பெரிய அணியாக இருந்தாலும் தகுதிச் சுற்று போட்டியில் விளையாடிய பின்னரே உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் விளையாட முடியும். அது போல இப்போட்டிக்கான தகுதிச் சுற்று...
போர்ட் எலிசபத்தில் நான்காவது ஒருநாள் போட்டியின் போது அவுஸ்திரேலியா வீரரும், தென் ஆப்பிரிக்க வீரரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 4 வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி...
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேட்ட கேள்விக்கு கோஹ்லி ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை இந்திய அணி தன்னுடைய சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது. இத்தொடர் முழுவதுமே இந்திய வீரர் அஸ்வினின் செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இது குறித்து...
மிர்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி தோல்விஅடைந்ததால், இரண்டாவது போட்டியில் வங்கதேச வீரர்கள் சற்று ஆக்ரோசத்துடன் விளையாடினர். இதனால் வங்கதேச அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் வங்கதேச அணியின் வெற்றிக்கு சற்று...
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 321 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் விருதும் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. அஸ்வினுக்கு இது 7வது தொடர் ஆட்டநாயகன் விருதாகும். இந்நிலையில் முன்னாள்...
தன்னுடைய 70 வயதிலும் பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்திருக்கும் ஒரு பாட்டி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தை சேர்ந்தவர் மேரி கிளைடான் (70). இவர் தன் இளம் வயதிலிருந்தே பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதில் பங்கேற்று பல வெற்றிகளையும், பரிசுகளையும் குவித்துள்ளார். இது பற்றி இவர் கூறுகையில், என் இளம் வயதிலிருந்தே நான்...
சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் Robin Quartarone (28). இந்த இளம் வயதில் இவர் செய்து வரும் தொண்டுகள் ஏராளம். அனாதைகளுக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பள்ளிக்கூட சுவர்களுக்கு பெயிண்ட் அடிப்பது, தேவையானவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, தாகம் தீர்க்க தண்ணீர் கேன் வாங்கி தருவது என பல உதவிகளை இந்த மனிதர் செய்து வருகிறார். Robin அடிக்கடி அனாதை ஆசிரமங்களுக்கு செல்வது வழக்கம். அங்கு வசிக்கும் ஒரு...
ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு கடந்த ஜீன் மாதம் நடந்த தேர்வில், 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அவரை பரிசோதித்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய உள்ளாடையில் அதிநவீன கமெரா கொண்ட கருவியை பொருத்தியிருந்தார். இதன்மூலம்...
ரஷ்ய விமானங்கள் சிரியா மீது நேற்று நடத்திய தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதையும் மீறி ரஷ்யா தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அலோப்போ நகரம் மீது ரஷ்யா போர் விமானங்கள் மூலம் நேற்று மீண்டும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் கட்டிடம் ஒன்று...
தோட்டத்தொழிலாளர்களை மீண்டும் வீதியில் இறக்கிப் போராட்டங்களை நடத்தத் தூன்டிவிட முற்படுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அட்டன் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைபாட்டு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் 12.10.2016 அதாவது இன்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வுகோரி கடந்த சில நாட்களாக மலையகம் எங்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தினூடாக அமைதி நிலை...