பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடுவில் மகளிர் கல்லூரியில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்படவுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் மாற்றம் தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினையின்போது, தேவையற்ற நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்தியதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதோடு, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கண்காணிப்புக் கருவிகளை பொருத்தவுள்ளதாக பேராயர் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரபல பாடகர் ஹிராஜின் சகோதரி அனுசிகா ரிஸ்னி பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை 2018இல் ஹம்பாந்தோட்டையில் நடாத்துவதற்கு மேற்கிந்தியதீவுகளின் கோதேவி தீவில் ஏற்பாடு செய்த 'சென்ட் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சிக்காக இலங்கையில் இருந்து மொடல் அழகிகளை அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிகழ்விற்கு சென்ற குறித்த யுவதிகளுக்கு பணம் வழங்கியுள்ள பற்றுச் சீட்டுக்கள் போலியானவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது தொடர்பில்நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஹிராஜின்...
மஹிந்த ராஜபக்ஸவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர்ட் சிட்டி அமைக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியிலிருக்கும் வானம் கூட இலங்கைக்கு சொந்தமாகி இருக்காது சீனாவுக்கே சொந்தமாகி இருக்கும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், போர்ட் சிட்டி உருவாக்குவது தொடர்பில் மஹிந்த ஆட்சியின் போதே சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் மஹிந்த கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின்...
கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ ரெஜிமென்ட் சிக்கி தவித்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். எனினும் மஹிந்தவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளிலும் சிக்கியிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் காணி கொள்வனவு ஒன்றில் ரோஹித தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம்...
வட மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எச்.ஏ.ஏ சரத்குமார் கடமையை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காங்கேசந்துறை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமையேற்றுக் கொண்டார். இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்ததோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 5ஆவது வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக...
சம்மாந்துறை வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் முதல்தடவையாக ஒரு பெண்மணி சித்தியடைந்துள்ளார். சம்மாந்துறை அல் முனீர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி அப்துல்காதர் நுஸ்ரத் நிலுபரா என்பவரே இவ்வரலாற்றுச்சாதனையைப் புரிந்துள்ளார். இதுவரைகாலமும் சம்மாந்துறையிலிருந்து பெண் ஒருவர் இவ்வுயர் பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வரலாற்றுச்சாதனை புரிந்த ஆசிரியை செல்வி ஏ.சி.என்.நிலுபராவைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிப்பதற்காக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் இன்று வியாழக்கிழமை நேரடியாகப் பாடசாலைக்குச் சென்றார். அவருடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீரும் உடன்...
பாழடைந்துள்ள நல்லுார் கிட்டு நல்லூர் கிட்டு பூங்காவில் நடக்கும் சீரழிவுகள்..!! யாழ்.நல்லூர் கிட்டு பூங்காவில் நாளாந்தம் நடைபெறும் சமூகவிரோத செயல்களால் பல இன்னல்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்பூங்கா தூய்மையாக பராமரிக்கப்பட்டு வந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதுபோக்கினை இப்பூங்காவில் களித்தனர். ஆனால் யுத்தம் காரணமாக இப்பூங்கா கைவிடப்பட்டது. தற்போது இப் பூங்கா பாரிய பற்றைக்...
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பருத்தித்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை, லெப். விமல் விக்கிரமகே என்ற அதிகாரி சுட்டுக் கொன்றார். சந்தேக நபர் கைவிலங்கிடப்பட்டிருந்த...
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டியிட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியெனவும் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துக்கூறுகையில் மகிந்த காலத்தில் பயங்கரவாதியான கருணாவிற்கு அமைச்சர் பதவியும் கட்சியின் உப தலைவர் பதவியையும் வழங்கினார். ஆனால் மைத்திரியோ சம்பந்தனை தன்னுடன்...
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். கடற்படை தொழிற்சாலையின் பொறியியலாளர் என்று கூறப்படுகின்ற ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு குத்திக்கொலைச் செய்யப்பட்டுளள்னர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது. 23 மற்றும் 31 வயதுடைய இரண்டு பேரே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலம் சூரியவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதமே இந்த மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மீகரபுற பிரதேச தபால் நிலையத்தின் அருகில் மோட்டார் சைக்கிளில்...